பேரழிவின் அறிகுறியா?. இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 77 திமிங்கலங்கள்!. விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
Whales: ஸ்காட்லாந்து கடற்கரையில் 77 பைலட் திமிங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்காட்லாந்தின் ஓர்க்னி தீவுக்கூட்டத்தின் சாண்டே தீவில், பிரிட்டிஷ் டைவர்ஸ் மரைன் லைஃப் ரெஸ்க்யூ (BDMLR) அமைப்பால், கடந்த வியாழக்கிழமை அன்று கரையோரத்தில் 77 பைலட் திமிங்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் 65 ஏற்கனவே இறந்துவிட்டன. மீதமுள்ள 12 பைலட் திமிங்கலங்கள் உயிருடன் இருந்ததாக கூறப்படுகிறது. திமிங்கலங்கள் பல காரணங்களுக்காக கரையில் ஒதுங்குகின்றன. அதாவது அவை தங்கள் வழியை மறந்துவிட்டாலும் அல்லது அலைகளால் சிக்கிக்கொண்டாலும் கரை ஒதுங்கும்.
இதனிடையே இந்த நிகழ்வுக்கு பின்னால் எந்த ஒரு உறுதியான காரணமும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். முன்னதாக ஒரு வருடத்திற்கு முன்பு இதேபோன்ற நிகழ்வு, பிரதான நிலப்பகுதியின் மேற்கில் அமைந்துள்ள மற்றொரு ஸ்காட்டிஷ் தீவான லூயிஸில் 55 திமிங்கலங்கள் இறந்து கிடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore:8 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன!. பிரதமர் மோடி பெருமிதம்!