For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வானில் நிகழ்ந்த அதிர்ச்சி!… பெரும் விபத்து தவிர்ப்பு!… மிரண்டு போன விஞ்ஞானிகள்!

06:41 AM Apr 12, 2024 IST | Kokila
வானில் நிகழ்ந்த அதிர்ச்சி … பெரும் விபத்து தவிர்ப்பு … மிரண்டு போன விஞ்ஞானிகள்
Advertisement

NASA: ரஷ்ய- அமெரிக்கா செயற்கைக்கோள்கள் அருகே வந்து மோதாமல் விலகிச் சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகளை நிம்மதியடைந்தனர்.

Advertisement

சமீப காலமாகவே விண்வெளி சார்ந்த ஆராய்ச்சிகள் அதிகரித்துவிட்டது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு விண்வெளிக்கு செயற்கைக்கோளை அனுப்பி பலவிதமான ஆய்வுகள் செய்து வருகின்றனர்.

விண்வெளியின் பல பகுதிகளையும் உலக நாடுகள் ஆய்வு செய்து வரக்கூடிய நிலையில், சில நாடுகள் விண்வெளிக்கு தங்களின் செயற்கைக்கோளை அனுப்பி மீண்டும் பூமிக்கு வெற்றிகரமாகக் கொண்டு வருவதும், சில திட்டங்கள் தோல்வியில் முடிவதும் என மாறி மாறி நடந்தாலும், எத்தனை தோல்விகள் வந்தாலும் தொடர்ச்சியாக தங்கள் நாட்டின் செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பி, அவர்களின் திறமையை வெளி உலகத்திற்கு காட்டவேண்டும் என்ற முனைப்பிலேயே செயல்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில், ஒவ்வொரு நாடுகளும், அதன் தேவைக்கேற்ப, அவ்வப்போது செயற்கைக்கோள்களை அனுப்புகின்றனர். இவ்வாறு விண்வெளியில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோளானது, குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செயல்படும்தன்மை கொண்டது. இதையடுத்து, அங்கு குப்பைகளாக வலம் வருகின்றன. இந்நிலையில் பல வருடங்களாக அனுப்பப்பட்ட செயற்கைக்கோளானது, விண்வெளியில் சுற்றி கொண்டு வருவதால், ஒன்றோடொன்று மோதிக் கொள்ளும் சூழல் உள்ளது. மேலும், செயல்பாட்டில் இருக்கும் செயற்கைக்கோள் மீது மோதினால், பெரும் சேதத்தை விளைவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் இரு செயற்கைக்கோள்கள் அருகருகே வந்து சென்றது விஞ்ஞானிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மோதல் ஏற்பட்டிருந்தால் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க செயற்கைக்கோளும் ரஷ்ய செயற்கைக்கோளும் ஒன்றோடொன்று 10மீ தொலைவு வரை அருகே சென்று கடந்து சென்றது. மோதல் நடந்தால் ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்றும், ஆயிரக்கணக்கான புல்லட் வேகமான குப்பைகள் பூமியைச் சுற்றி கொண்டிருக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் நாசா முன்னாள் விண்வெளி வீரர் கர்னல் மில்ராய் தெரிவிக்கையில், பூமியின் வளிமண்டலத்தை கண்காணிக்கும் நாசாவின் Timed (Thermosphere Ionosphere Mesosphere Energetics and Dynamics) செயற்கைக்கோள் பூமியை சுற்றி கொண்டிருக்கிறது. "பாதை 10 மீட்டருக்கும் குறைவான இடைவெளியில், ரஷ்யாவின் செயற்கைக்கோள் இருந்தது என்பதை நாங்கள் அறிந்தோம்.

செயலிழந்த ரஷ்ய உளவு செயற்கைக்கோள் காஸ்மோஸ் கிட்டத்தட்ட நாசாவின் செயற்கைக்கோளை மோதும் அளவுக்கு வந்து கடந்து சென்றது. இரண்டு செயற்கைகோள்களும் மோதியிருந்தால், மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கும் என தெரிவித்தார். இரண்டு செயற்கைக்கோள்கள் மோதியிருந்தால் ஆயிரக்கணக்கான துண்டுகள் சிதறி விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும். இதனால், பல விளைவுகள் ஏற்பட்டிருக்கும் எனவும் கூறினார்.

இரண்டு செயற்கைக்கோள்களும் மோதியிருந்தால், விண்வெளியில் குப்பைகள் உருவாக்கப்பட்டிருக்கும். ஒரு மணி நேரத்திற்கு 10,000 மைல் வேகத்தில் சிறிய துண்டுகள் சென்றிருக்கும். இந்த வேகத்தில் பயணிக்கும் துண்டுகளானது மற்றொரு விண்கலத்தில் துளையிட்டு இருக்கும். இது மனித உயிர்களை ஆபத்தில் கொண்டு செல்லும் வாய்ப்பையும் ஏற்படுத்தியிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Readmore: BJP: காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரை தட்டி தூக்கிய பாஜக…!

Advertisement