த.வெ.க மாநாட்டு திடல் அருகே தொண்டர்கள் மது அருந்தும் காட்சி வெளியானதால் பரபரப்பு...!
விஜய் மாநாட்டிற்கு வருபவர்கள் மது அருந்திவிட்டு வரக்கூடாது ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திறந்த நிலையில், பல கட்சி தொண்டர்கள் மாநாட்டு திடல் அருகே மதுவை அருந்தும் காட்சி வெளியாகிய பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் ‘வெற்றி கொள்கை திருவிழா’ என்ற பெயரில் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய் 100 அடி கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பேசி வருகிறார்.
இந்த மாநாட்டுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் இருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பலர் நேற்று இரவு முதலே மாநாட்டு திடலில் குவிந்துள்ளனர். சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் மாநாடு திடலில் உள்ளனர். விஜய் மாநாட்டிற்கு வருபவர்கள் மது அருந்திவிட்டு வரக்கூடாது ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திறந்த நிலையில், பல கட்சி தொண்டர்கள் மதுவை மாநாட்டு திடல் அருகே அருந்தும் காட்சி வெளியாகிய பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பமே கட்சிக்கு இது போன்ற சம்பவங்கள் மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இது விஜய் அவர்களுக்கு பெரும் சங்கடத்தையும் உண்டாக்கியுள்ளது.
மாநாட்டிற்கு வந்த வாகனங்கள் விபத்து :
திருச்சியில் இருந்து விக்கிரவாண்டி நோக்கி காரில் வந்துகொண்டிருந்த தவெக தொண்டர்கள் 6 பேர், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை அருகே உசேன்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவர்கள் சென்ற கார் தடுப்பில் மோதி அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே திருச்சி தெற்கு மாவட்ட தவெக நிர்வாகிகள் 2 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படுகாயமடைந்த மேலும் 2 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.