முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மகளின் எதிர்காலம் கருதி குடும்பம் வைத்த கோரிக்கை..!! இந்த வாரம் 2 எவிக்‌ஷன்..? மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பிரதீப்..?

10:36 AM Nov 11, 2023 IST | 1newsnationuser6
Advertisement

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் யாரும் எதிர்பார்க்காத வண்ணம், புது புது பிரச்சனைகளை இருவீட்டை சேர்ந்த போட்டியாளர்களும் அரங்கேற்றி எப்போதும் வீட்டை பரபரப்பாகவே வைத்துள்ளனர். மேலும், இந்த முறை காதல் கண்டென்ட்டும் பிக்பாஸ் வீட்டில் நிரம்பி வழிகிறது.

Advertisement

வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்ததில் இருந்து, பிக்பாஸ் வீட்டில் இருந்த பழைய போட்டியாளர்களில் சிலரை தவிர மற்ற அனைவரும் அவர்களை டார்கெட் செய்து வஞ்சித்து வரும் நிலையில், கடந்த வாரம் உரிமை குரல் உயர்த்துகிறோம் என்கிற பெயரில் மிகவும் ஸ்ட்ராங் பிளேயராக பார்க்கப்பட்ட, பிரதீப்பை மாயாவின் புல்லி கேங் திட்டம் போட்டு வெளியேற்றியது. கமல்ஹாசனும் என்ன பிரச்சனை என தீர விசாரிக்காமல் பிரதீப்புக்கு ரெட் கார்டு வழங்கியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.

இந்நிலையில், மீண்டும் விஜய் டிவி தரப்பு பிரதீப்பை பிக்பாஸ் வீட்டுக்குள் அழைத்துவர முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படும் நிலையில், இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் நடைபெற வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. பிரதீப் விஷயத்தில் உண்மையை மறைத்த பூர்ணிமா ரவி, இந்த வாரம் மிகவும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளதால், அவர் தான் எவிக்‌ஷன் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஐஷுவின் பெற்றோர் தன்னுடைய மகளின் எதிர்காலம் கருதி, அவளை வெளியே அனுப்பி விடுங்கள் என பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்களிடம் கோரிக்கை வைத்துள்ளதால், அவரும் இந்த வாரம் வெளியேற்றப்படலாம் என கூறப்படுகிறது.

Tags :
பிக்பாஸ் நிகழ்ச்சிபிரதீப் ஆண்டனிபூர்ணிமாவிஜய் டிவி
Advertisement
Next Article