For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வயதான விவசாய தம்பதியினர் வைத்த கோரிக்கை..!! உடனே தவெகவினர் செய்த நெகிழ்ச்சி செயல்..!!

The general secretary of the party, Anand, accepted the request of the farmer who had provided space for the conference of the Tamil Nadu Victory Association, and presented a cow with a calf at the venue of the conference.
02:33 PM Oct 10, 2024 IST | Chella
வயதான விவசாய தம்பதியினர் வைத்த கோரிக்கை     உடனே தவெகவினர் செய்த நெகிழ்ச்சி செயல்
Advertisement

தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு இடம் கொடுத்த விவசாயியின் கோரிக்கையை ஏற்று, கன்றுடன் கூடிய பசுமாட்டை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மாநாடு நடைபெறும் இடத்தில் வழங்கினார்.

Advertisement

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, அங்கு பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநாடு நடைபெறும் இடம் 85 ஏக்கர் பரப்பளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், வி.சாலையை சார்ந்த ராதாகிருஷ்ணன் என்ற விவசாயி ஒன்னரை ஏக்கர் நிலத்தை கொடுத்துள்ளார்.

வயதான விவசாயி என்பதால் தனது மனைவி ராஜாமணியுடன் வாழ்க்கையை நடத்தி செல்ல வழிவகை செய்ய வேண்டுமென தமிழக வெற்றிக் கழகத்தினரிடம் கோரிக்கை வைத்துள்ளார். அவர்களின் கோரிக்கையை ஏற்ற அக்கட்சியின் நிர்வாகியான திருவள்ளூரை சார்ந்த எம்.டி மணி என்பவர் ரூ.36,000 செலவில் கன்றுடன் கூடிய பசு மாட்டினை இன்று வாங்கிக் கொடுத்துள்ளார்.

அதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் மாநாடு நடைபெறும் இடத்தில் வயதான தம்பதியினரிடம் வழங்கினார். வயதான காலத்தில் வாழ்க்கையை நடத்த வழிவகை செய்த அக்கட்சி நிர்வாகிகளுக்கும் விஜய்க்கும் வயதான தம்பதி நன்றி தெரிவித்துள்ளனர்.

Read More : ’எல்லாம் நாடகம்’..!! ’மாணவர்களின் உயிர் தான் போகுது’..!! நீட் விவகாரத்தில் சீறிப்பாய்ந்த எடப்பாடி..!!

Tags :
Advertisement