100க்கும் மேற்பட்டோரை காவு வாங்கிய மத நிகழ்வு!. அரசு அதிகாரி டு ஆன்மீகவாதி!. யார் அந்த போலே பாபா!
Bhole baba: உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் நேற்று (02.07.2024) ஆன்மிகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா உரையாற்றினார். இவரது பேச்சைக் கேட்க 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதற்காக கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கினர்.
இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலரும் மயங்கி விழுந்துள்ளனர். இந்த சிக்கி குழந்தைகள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக கூட்டத்தை நடத்திய சாமியார் போலே பாபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தப்பித்து ஓடிய சாமியார் போலே பாலாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஒட்டு மொத்த தேசத்தையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கான காரணமாக நிகழ்ச்சியை நடத்திய சாமியார் நராயண சாகர் ஹரி யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது. போலோ பாபா என்று அழைக்கப்படும் இவர் உத்த பிரதேச மாநிலத்தில் உள்ள எடா மாவட்டத்தின் படியாலி தாலுகாவில் உள்ள பஹதூர் கிராமத்தை சேர்நதவர்.
உளவுத்துறையில் பணியாற்றியதாக கூறும் இவர் தனது 26 வயதில் வேலையை உதறி தள்ளிவிட்டு ஆன்மிக சொற்பொழிவுகளை வழங்க தொடங்கியுள்ளர். நாடு முழுவதும் இவருக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் இருக்கிறார்களாம். குறிப்பாக வடக்கு உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் இவரை தெரியாதவர்களே இருக்க மாட்டர்கள் என்கிறார்கள்.
தற்போதைய காலகட்டத்தில் பல சாமியார்களும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார்கள். ஆனால், இவர் சமூக வலைத்தளங்களில் கணக்குகள் எதையுமே வைத்து இருக்கவில்லை. இதனால், வட இந்தியா அளவுக்கு நாட்டின் பிற பகுதிகளில் போலோ பாபா அவ்வளவு பரிட்சயமாக இல்லையாம். போலோ பாபாவின் நிகழ்ச்சி உத்தர பிரதேசத்தின் அலிகாரில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நடைபெறுகிறது. இதில் நூற்றுக்கானவர்கள் கலந்து கொள்வது வாடிக்கையாக உள்ளதாம். நுற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்கும் இந்த ஆன்மீக நிகழ்ச்சியில் தன்னார்வர்களே உணவு, குடிநீர் என அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்கள்.
Readmore: இனிமேல் தான் ஆட்டம் இருக்கு!. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த டேவிட் மில்லர்!