இந்தியாவில் ஆணுறைகள் அதிகம் பயன்படுத்தப்படும் மாநிலம் எது தெரியுமா? - WHO வெளியிட்ட அறிக்கை
உலக சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய அறிக்கை இந்தியாவில் பாதுகாப்பற்ற உடலுறவு அதிகரித்து வரும் போக்கை வெளிப்படுத்துகிறது. எந்தெந்த மாநிலங்கள் ஆணுறைகளை அதிகம் பயன்படுத்துகின்றன என்பதையும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. சுகாதார அதிகாரிகளின் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் இருந்தபோதிலும், பாலியல் உறவுகளின் போது ஆணுறை பயன்பாடு குறைந்து வருவதை இது குறிக்கிறது.
ஆணுறை பயன்பாடு அதிகம் உள்ள மாநிலங்கள்
2021-22 ஆம் ஆண்டிற்கான தேசிய குடும்ப சுகாதாரத் துறை நடத்திய ஆய்வின்படி, ஆணுறை உபயோகத்தில் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி முதலிடத்தில் உள்ளது. இந்த பிராந்தியத்தில், ஒவ்வொரு 10,000 ஜோடிகளில் சுமார் 993 பேர் உடலுறவின் போது ஆணுறைகளைப் பயன்படுத்துகின்றனர். ஆந்திரப் பிரதேசத்தில், 10,000 ஜோடிகளில் 978 தம்பதிகள் ஆணுறைகளைப் பயன்படுத்துகின்றனர். கர்நாடகா மாநிலத்தில் 10,000 ஜோடிகளில் 307 தம்பதிகள் மட்டுமே ஆணுறைகளைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவி உள்ள மக்கள் தொகையில் 6% மக்கள் ஆணுறைகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்தியா ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 3.307 பில்லியன் ஆணுறைகளை வாங்குகிறது, உத்தரப் பிரதேசம் சுமார் 530 மில்லியன் பயன்படுத்துகிறது. இருப்பினும், சமீபத்திய ஆய்வுகள், புதுச்சேரியில் 960, பஞ்சாப் 895, சண்டிகர் 822, ஹரியானா 685, இமாச்சலப் பிரதேசம் 567, ராஜஸ்தான் 514, மற்றும் குஜராத்தில் 430 தம்பதிகள் ஆணுறைகளைப் பயன்படுத்துவதில் சரிவைச் சுட்டிக்காட்டுகின்றன. இந்த அறிக்கை நாட்டில் ஆணுறை பயன்பாடு மற்றும் பாலியல் ஆரோக்கிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
Read more ; வீங்கிய கண்கள்.. நிறம் மாறிய தோல்.. வினையாக மாறிய தடுப்பூசி..!! அமெரிக்க பெண்ணிற்கு நடந்தது என்ன?