முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

விலங்குகளிடையே மாற்றத்தை ஏற்படுத்திய அபூர்வ சூரிய கிரகணம்!

08:39 AM Apr 10, 2024 IST | Kokila
Advertisement

Solar eclipse: ஒளி மங்கத் தொடங்கும் போது தாவரங்களும் விலங்குகளும் முழுமையடையத் தொடங்கும் என்று சான் அன்டோனியோவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் வானியல் பேராசிரியரான ஏஞ்சலா ஸ்பெக் கூறினார். இது சுமார் 75%, 80% கிரகணம் அடைந்தவுடன், விலங்குகள் செயல்படத் தொடங்கும் அவர் கூறினார்.

Advertisement

சூரிய கிரணகத்தின்போது, விலங்குகளிடையே ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து தெற்கு கரோலினாவில் உள்ள ரிவர்பேங்க்ஸ் மிருகக்காட்சிசாலையில் பணிபுரியும் விஞ்ஞானி ஆடம் ஹார்ட்ஸ்டோன்-ரோஸ் கூறுகையில்,"ஆரம்பத்தில் மிருகக்காட்சிசாலையில் இருக்கும் விலங்குகளுக்கு 2017இல் ஏற்பட்ட கிரகணத்தால் தாக்கம் ஏற்படாது என்றே கருதினோம்" என்று கூறினார்.

அன்று கிரகணத்திற்கு முன்பும், பின்பும் 17 உயிரினங்களின் நடவடிக்கைகளை கவனிப்பதற்காக பயிற்சி பெற்ற ஆய்வாளர்களும், மக்களும் அங்கு கூடியிருந்தனர். "ஆனால், கிரகணத்தின் போது மிருகங்கங்களின் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளால் அன்றைய நாள் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக மாறிவிட்டது. அங்கிருந்த மக்கள் அனைவரும் ஆரவாரமாக இருந்தனர்."

அங்கிருந்த முக்கால்வாசி விலங்குகள் ஏதோ அற்புதமான மற்றும் வாழ்க்கையையே மாற்றப்போகும் நிகழ்வை எதிர்கொள்வது போன்ற நடவடிக்கைகளை வெளிப்படுத்தின என்று கூறுகிறார் ஹார்ட்ஸ்டோன்-ரோஸ். இந்த கலவையான எதிர்வினைகள் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டது. அதில் சாதாரணமாக இருந்த விலங்குகள், தங்கள் மாலை நேர நடைமுறைகளைச் வழக்கமாக செய்தவை, கவலை அல்லது புதுமையான நடத்தைகளைக் காட்டியவை என பிரிக்கப்பட்டன.

கிரிஸ்லி கரடிகள் போன்ற சில விலங்குகள் ஒரு அரிய பிரபஞ்ச நிகழ்வை அனுபவிப்பதில் முற்றிலும் ஆர்வமில்லாமல் இருந்தன. "கிரகணம் முழுமையாக நிகழும் போது போது அவை உண்மையில் தூங்கிக்கொண்டும், இயல்பாகவும் இருந்தன," என்கிறார் ஹார்ட்ஸ்டோன்-ரோஸ். "ஒட்டுமொத்தத்தில் அவற்றில் ஒன்று தலையை குனிந்துகொண்டு என்ன நடந்தால் எனக்கென்ன கவலை என்பது போல இருந்ததாக," அவர் கூறுகிறார்.

"மறுபுறம் இரவுநேரப் பறவைகள் மிகவும் குழப்பமான மனநிலையில் காணப்பட்டன. தவளைகளின் தோற்றம் அழுகிய மரத்தின் பட்டைகளை போல இருந்தது" என்று கூறினார் ஹார்ட்ஸ்டோன்-ரோஸ். இரவு நேரங்களில் உணவுகளை தேடுவதற்காக பறவைகள் தங்களது உடலை மறைத்துக் கொள்வது போல, கிரகணத்தின் உச்சத்திலும் அதையே செய்தன. கிரகணம் முடிந்த பிறகு மரக்கிளையில் தங்களது வழக்கமான இடங்களுக்கு அவை நகர்ந்து விட்டன என்று ஹார்ட்ஸ்டோன்-ரோஸ் கூறினார்.

நிதானமான விலங்குகளான ஒட்டகச்சிவிங்கிகள், காடுகளில் வேட்டையாடப்படும் போது ஓடுவது போல் திடுக்கிட்டு ஓட ஆரம்பித்தன." இதேபோல், கிரகணத்தின் போது சில விலங்குகள் கவலை மற்றும் துன்பமாக இருப்பது போன்ற அறிகுறிகளைக் காட்டின. "பொதுவாகவே நிதானமான விலங்குகளாக கருதப்படும் ஒட்டகச்சிவிங்கிகள், காடுகளில் வேட்டையாடப்படும் போது ஓடுவது போல் திடுக்கிட்டு ஓட ஆரம்பித்தன. இது டென்னசியில் உள்ள நாஷ்வில்லி மிருகக்காட்சிசாலையில் இருந்த ஒட்டகச்சிவிங்கிகளின் நடவடிக்கையை பிரதிபலித்தது.

ஆனால் இவற்றில் கலாபகோஸ் ராட்சத ஆமைகளே விசித்திரமான நடத்தையைக் கொண்டிருந்தன. "பொதுவாக, ஆமைகள் மிகவும் சாதுவாக அமர்ந்திருக்கும். அவை மிகவும் உற்சாகமாக இருக்கும் விலங்குகள் அல்ல," என்கிறார் ஹார்ட்ஸ்டோன்-ரோஸ். இருப்பினும், கிரகணம் உச்சமடையும் வேளையில் அவை வேகமாக ஒன்றுக்கொன்று இனப்பெருக்கத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டதாக கூறினார். கிரகணம் உற்சாகத்தை தரக்கூடியது என்பதால், அன்று மக்கள் மிகவும் பரபரப்பாகவும் சத்தமிட்டுக் கொண்டும் இருந்தனர்" என்கிறார் ஹார்ட்ஸ்டோன்-ரோஸ்.

Readmore: ”பிரதமர் மோடி இதை மட்டும் செய்துவிட்டால் விலகி விடுகிறோம்”..!! சீமான் சவால்..!!

Advertisement
Next Article