For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'இன்னைக்கு ஒரு புடி’..!! கமகம மட்டன் பிரியாணி, சிக்கன் 65..!! திமுக இளைஞரணி மாநாட்டுக்கு திரளும் தொண்டர்கள்..!!

10:39 AM Jan 21, 2024 IST | 1newsnationuser6
 இன்னைக்கு ஒரு புடி’     கமகம மட்டன் பிரியாணி  சிக்கன் 65     திமுக இளைஞரணி மாநாட்டுக்கு திரளும் தொண்டர்கள்
Advertisement

சேலத்தில் இன்று துவங்க உள்ள திமுக இளைஞரணி மாநாட்டை ஒட்டி 8,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

சேலத்தில் இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள், இளைஞர் அணியினர் என லட்சக்கணக்கானோர் நேற்று மாலையே மாநாட்டு திடலில் திரண்டுள்ளனர். இதையொட்டி 1,500 ட்ரோன்களில் திமுக மற்றும் திராவிட வரலாற்றை பறைசாற்றும் வண்ணவிளக்குகள், இருசக்கர வாகன பேரணியுடன் மாநாடு களைகட்ட தொடங்கியுள்ளது.

திமுக இளைஞரணியின் முதல் மாநில மாநாடு கடந்த 2007ஆம் ஆண்டு நெல்லையில் நடைபெற்றது. மாநாட்டை அப்போதைய திமுக இளைஞரணி செயலாளரும் தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி இருந்தார். இதையடுத்து இரண்டாவது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று நடைபெறுகிறது. இதற்காக சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 9 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட மைதானத்தில் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

மாநாட்டு பந்தலுக்குள் 1.5 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இதற்கிடையே, லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் இந்த மாநாட்டிற்கு வருகை தருவார்கள் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. 4 டிஐஜிகள், 19 எஸ்பிகள் தலைமையில் 8,000 மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டு திடலில் 10 லட்சம் பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, பிரட் அல்வா, தயிர் சாதம், ஸ்வீட், காலி பிளவர் சில்லி என ஏராளமான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

சமையல் கலைஞர்கள் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உணவு சமைக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 3 லட்சம் பேருக்கு ஒரு டீம் என்று மூன்று டீம்களாக பிரிக்கப்பட்டு பிரியாணி தயாரிக்கப்படுகிறது. அதேபோல் சிக்கன் 65, பிரட் அல்வா ஆகிய இரண்டையும் தயாரிக்க தனி டீம் வேலை பார்த்து வருகிறது. மேலும் சைவம் சாப்பிடுபவர்களுக்கு வெஜ் பிரியாணி, தயிர் சாதம், காலி பிளவர் சில்லி என எக்கச்சக்க உணவு வகைகள் சமைக்கப்படுகின்றன.

Tags :
Advertisement