For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Bloody Beggar : பிச்சைக்காரனாக மாறிய கவின்.. நெல்சனின் அட்ராசிட்டியுடன் வெளியான ப்ரோமோ!

10:48 AM May 05, 2024 IST | Mari Thangam
bloody beggar   பிச்சைக்காரனாக மாறிய கவின்   நெல்சனின் அட்ராசிட்டியுடன் வெளியான ப்ரோமோ
Advertisement

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகனாக இருக்கும் கவின், இயக்குநர் நெல்சன் தயாரிக்கும் புது படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தின் ப்ரமோ தற்போது வெளியாகியிருக்கிறது. காமெடியாக வெளியாகியிருக்கும் இந்த ப்ரமோவில் நெல்சன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் இந்த ப்ரமோவில் வந்துள்ளனர். 

Advertisement

தமிழ் சினிமாவில் தற்போது டாப் ட்ரெண்டிங்கில் உள்ள இயக்குநர் நெல்சன். 2018 ஆம் ஆண்டு ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் டாக்டர், விஜயுடன் பீஸ்ட் , ரஜினிகாந்துடன் ஜெயிலர் போன்ற படங்களுடன் தனக்கென ஒரு ரசிகர்களை உருவாக்கிக்கொண்டார். டார்க் காமெடி ஜார்னரில், இவர் இயக்கிய படங்கள் ரசிகர்களை மனதை கவர்ந்தது.

இந்நிலையில், கடந்த மே 1ஆம் தேதி யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார். தனக்கென “Filament pictures”  தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன்மூலம், இயக்குனர் நெல்சன் தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து இருக்கிறார். புது தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கும் நிலையில் அவரது முதல் படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது.

நெல்சன் தயாரிப்பில் கவின் நடிக்கும் புதிய படத்துக்கு ‘Bloody Beggar’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு  புரொமோ வீடியோவில் நடிகர் கவின் பிச்சைக்கார வேடத்தில் நடித்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்து, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. படத்திற்கு ஜென் மார்டின் இசையமைக்கிறார்.

தன் படங்கள், மற்றும் பாடல்கள் குறித்த அறிவிப்பை தனது பாணியில் ஜாலியாக வெளியிடும் நெல்சன் இப்போது தனது ப்ரொடக்‌ஷனில் உருவாகும் படத்தின் அறிவிப்பையும் அதே போல அறிவித்திருக்கிறார். இது, தற்போது ரசிகர்கர்கள் மத்தியில் நல்ல கவனத்தை ஈர்த்து வருகிறது. காமெடியாக வெளியாகியிருக்கும் இந்த ப்ரமோவில் நெல்சன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் இந்த ப்ரமோவில் வந்துள்ளனர்.

Tags :
Advertisement