For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சிப்பாய் பேயால் வேட்டையாடப்பட்ட இளவரசி..!! அந்த ரூம்ல ஏதோ இருக்கு..!! இருட்டில் நடக்கும் பயங்கர சம்பவம்..!!

Princess Martha Louise of Norway has revealed she was haunted every night during her youth by a soldier from Hitler's Nazi army, claiming the soldier was a ghost.
12:24 PM Jul 16, 2024 IST | Chella
சிப்பாய் பேயால் வேட்டையாடப்பட்ட இளவரசி     அந்த ரூம்ல ஏதோ இருக்கு     இருட்டில் நடக்கும் பயங்கர சம்பவம்
Advertisement

அரண்மனை என்ற பெயரை கேட்டாலே, நம் நினைவுக்கு முதலில் வருவது பேய் தான். ஏனென்றால், அந்த அளவுக்கு நம் ஊர் சினிமாக்காரங்க அரண்மனையை ரவுண்டு கட்டி பேய் படமா எடுத்து தள்ளிட்டாங்க. ஆனால், நார்வே நாட்டு இளவரசி மார்த்தா லூயிஸ் (Martha Louise) தனது இளமை பருவத்தில் ஒவ்வொரு நாள் இரவும் ஹிட்லரின் நாஜிப் படையை சேர்ந்த சிப்பாயால் வேட்டையாடப்பட்டதாகவும், அந்த சிப்பாய் ஒரு பேய் எனக்கூறி அதிரவைத்துள்ளார்.

Advertisement

இளவரசி மார்த்தா லூயிஸ் கூறுகையில், ”நான் அந்த அறைக்கு சென்ற நாள் முதலே இருளை பார்த்து பயந்தேன். அந்த இருளில் இருந்து ஒரு மனிதன் என்னை பார்த்துக் கொண்டிருந்தான். இதை என் குடும்பத்தினரிடம் கூறினேன். ஒவ்வொரு நாள் இரவும் என்னுடைய பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அந்த அறையில் இருக்கும் திரைசீலைகளை விரித்து காட்டி பார் இங்கே யாரும் இல்லை என்பார்கள். அந்த இருளில் வரும் சிப்பாய் என்னை பயமுறுத்திக் கொண்டே இருக்கும்" எனக் கூறியுள்ளார்.

உண்மையில், அந்த அரண்மனையில் உள்ள அவரது அறையில் நடந்த அந்த பயங்கர சம்பவம் குறித்து எதுவும் தெரியாதவராக தான் மார்த்தா இருந்துள்ளார். ஆனால், மார்த்தாவின் தந்தையும் நார்வேயின் மன்னருமான கிங் ஹெரால்ட் தன்னுடைய அறையில் இதுபோன்ற விரும்பதாக சம்பவம் நடப்பதை உணர்ந்துள்ளார். பின்னர் தான் தன்னுடைய மகளிடம் அந்த அரண்மனையில் நடந்த ஒரு சம்பவம் குறித்து பேசியுள்ளார். நார்வேயில் அடால்ஃப் ஹில்டரின் வலது கரமான இருந்தவர் ஜெனரல் ரெடிஸ்.

ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் நார்வே இருந்தபோது அரச குடும்பத்தினர் வசிக்கும் கோட்டையில் தான் ரெடிஸ் தங்கியிருந்தார். நாசிப்படைகள் தோற்று ஜெர்மனி சரணடைந்த போதுமே 8, 1945ஆம் ஆண்டு ரெடிஸ் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு மரணம் அடைந்தார். அவர் தான் தங்கியிருந்த அறையில் இருந்த சோபாவில் சடலமாக மீட்கப்பட்டார். நார்வே அரச குடும்பம் மீண்டும் கோட்டைக்கு திரும்பும் போது அந்த அறையை தான் இளவரசி மார்த்தா தேர்ந்தெடுத்துள்ளார். ஒவ்வொரு இரவும் அந்த நாசிப் படையை சேர்ந்த சிப்பாயின் ஆவி தன்னை முறைத்துப் பார்த்து கொண்டிருந்ததாகவும், தன்னை பயமுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.

Read More : தொடர் கனமழை..!! காய்கறிகளின் விலை அதிரடி உயர்வு..!! தக்காளி எவ்வளவு தெரியுமா..?

Tags :
Advertisement