For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பூமியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!… ரிக்டர் அளவில் 6.4ஆக பதிவு!... சுனாமி எச்சரிக்கையா?

06:12 AM May 13, 2024 IST | Kokila
பூமியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் … ரிக்டர் அளவில் 6 4ஆக பதிவு     சுனாமி எச்சரிக்கையா
Advertisement

Earthquake: மெக்சிகோவின் ஷைபஸ் மாகாணத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

மெக்சிகோவின் எல்லை நகரமான சுசியேட் அருகே நேற்று காலை 6 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பசிபிக் கடற்கரையிலிருந்து 10 மைல் (16 கிலோமீட்டர்) மேற்கு-தென்மேற்கில் பிரிசாஸ் பார்ரா டி சுசியேட்டிற்கு அப்பால் மையம் கொண்டிருந்தது. அதேவேளை, இந்த நிலநடுக்கம் 75 கிமீ (46.6 மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மெக்ஸிகோவின் தேசிய சிவில் பாதுகாப்பு நிறுவனம் சமூக ஊடகங்களில் நிலைமையை கண்காணித்து வருவதாகவும் ஆனால் சேதம் குறித்த ஆரம்ப அறிக்கைகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. அத்தோடு, அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு மற்றும் மெக்சிகோவின் கடற்படையினர், சுனாமி ஏற்படும் அபாயம் ஏதும் இல்லை என்றும் அறிவித்துள்ளனர்.

Readmore: மக்களே குட்நியூஸ்!… அடுத்த மாதம் ‘ஒரே டிக்கெட்’ திட்டம் அமல்!… QR கோடு மூலம் பெறலாம்!

Advertisement