பெட்ரோலுக்கு பணம் தராமல் தகராறு செய்த போலீஸ்..!! பங்க் ஊழியரை காரில் இழுத்து சென்ற அவலம்!!
காருக்குப் போட்ட பெட்ரோலுக்கு பணம் கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியரை காரின் பானட்டில் வைத்து இழுத்துச் சென்ற கேரளாவைச் சேர்ந்த போலீஸ் டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூர் நகர போலீஸ் எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலைய டிரைவர் சந்தோஷ்குமார். இவர் அண்மையில் ஒரு பெட்ரோல் பங்குக்கு பெட்ரோல் நிரப்ப காரில் சென்றுள்ளார். அப்போது பெட்ரோல் பங்கிலிருந்த ஊழியர் அனில், பெட்ரோல் போட்டுவிட்டு பணம் செலுத்துமாறு கூறியுள்ளார். அப்போது பணம் தர மறுத்து அனிலுடன், சந்தோஷ்குமார் வாக்கு வாதம் செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் சந்தோஷ்குமார் பணம் கொடுக்க மறுத்ததுடன், தனது காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்ப நினைத்து காரை ஆன் செய்துள்ளார். அவரது காரை வழிமறித்தப்படி காருக்கு முன்னால் வந்து நின்ற அணில், பணத்தை கொடுத்துவிட்டு காரை எடுத்துச்செலுங்கள் என்று கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரம் கொண்ட சந்தோஷ்குமார், காரை அணில் மீது மோதியுள்ளார். இதில் அணில் காரின் பேனட்டில் ஒட்டிக்கொள்ள.... காரை நிறுத்தாமல் கிட்டத்தட்ட 150 மீட்டர் வரை ஓட்டிச்சென்றுள்ளார் சந்தோஷ்குமார்.
ஆனால், அவரை காரிலிருந்து இறக்கி விடாமலேயே சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் காரின் பானட்டிலேயே வைத்து இழுத்துச் சென்றுள்ளார் சந்தோஷ்குமார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. இந்த சம்பவத்தில் காயமடைந்த அனில், கண்ணூர் டவுன் போலீஸில் சந்தோஷ்குமார் மீது புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து போலீஸ் டிரைவர் கே.சந்தோஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்றும் போலீஸ் கமிஷனர் அஜித் குமார் தெரிவித்தார்.
Read more ; ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா..? அப்படினா இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!!