புதிதாக கட்டிய பாலத்தில் விழுந்த பள்ளம்… பொதுமக்கள் அதிர்ச்சி.! நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு.?
விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலம் ஒன்றில் பள்ளம் விழுந்துள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர். இது தொடர்பாக அரசு அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி என்ற கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. இங்கு புதியதாக பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலம் கட்டப்பட்டு ஒரு மாதமே ஆன நிலையில் பாலம் சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இது அங்குள்ள பொது மக்களை பெரும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
பொது மக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்படும் பாலங்கள் மற்றும் சாலைகள் கட்டி முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்த சில நாட்களிலேயே பழுதடைவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இவற்றால் விபத்து போன்ற அசம்பாவிதங்களும் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. இதுவே இது தொடர்பாக அரசு அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
பொதுப்பணித்துறை சார்பாக விடப்படும் டென்டர்களில் திருமணவில் ஊழல் நடப்பதாகவும் அதன் காரணமாகவே இது போன்ற தரமற்ற சாலைகள் மற்றும் பாலங்கள் அமைக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி இருக்கின்றனர். இதுபோன்ற தவறுகள் நடக்காத வண்ணம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.