உஷார் மக்களே.. இந்தியாவிலும் பரவியது Mpox வைரஸ்..!! - மத்திய அரசு அலர்ட்
Mpox எனப்படும் வைரஸ் நோய் பரவி இருந்த நாட்டிலிருந்து இந்தியா திரும்பிய ஒருவருக்கு இந்த நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் மக்கள் யாரும் பயன்பட வேண்டாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதார அமைச்சகம், "ஏற்கனவே நிறுவிக்கப்பட்ட நெறிமுறைகளின் படி, இந்த விவகாரம் கண்காணிக்கப்படுகிறது. நோய் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கும், நாட்டில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கவும் அந்த நபருடன் தொடர்புடைய நபர்களைக் கண்டறியும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
தேசிய நோய்க்கட்டுப்பாட்டு மையம் (என்சிடிசி) முன்னதாக மேற்கொண்ட இடர் மதிப்பீட்டோடு இந்த புதிய வழக்கின் வளர்ச்சிகள் ஒத்துப்போகின்றன. என்றாலும் அச்சப்பட தேவை இல்லை. இதுபோன்ற தனிமைப்படுத்தப்பட்ட பயணிகள் தொடர்பான நோய் வழக்குகளை கையாள, நாடு முழு அளவில் தயாராக உள்ளது. சாத்தியமான ஆபத்துகளை எதிர்கொள்ளவும் அவற்றைத் தணிக்கவும் நடவடிக்கைகள் தயாராக உள்ளன" என தெரிவித்துள்ளது.
Read more ; அடேங்கப்பா லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே!! தவெக மாநாடு.. 33 நிபந்தனைகளை விதித்த காவல்துறை..!!