For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சுவாதி நட்சத்திரத்தில் ஆரம்பிக்கப்பட்ட கட்சி..!! உச்சத்தில் சனி..!! விஜய்க்கு அது கிடைக்கவே கிடைக்காது..!! ஜோதிடர்கள் கணிப்பு..!!

04:35 PM Feb 02, 2024 IST | 1newsnationuser6
சுவாதி நட்சத்திரத்தில் ஆரம்பிக்கப்பட்ட கட்சி     உச்சத்தில் சனி     விஜய்க்கு அது கிடைக்கவே கிடைக்காது     ஜோதிடர்கள் கணிப்பு
Advertisement

நடிகர் விஜய் "தமிழக வெற்றி கழகம்" என்ற பெயரில் புதிய கட்சி துவங்கியுள்ள நிலையில், அவரது கட்சி எந்த அளவிற்கு வெற்றிகரமாக அமையும் என ஜோதிடர்கள் தங்களது கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

Advertisement

அந்த வகையில் சதீஷ் என்கிற ஜோதிடர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஜோதிட கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”நடிகர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவர் இன்று ஆரம்பத்திற்கு கட்சியின் பெயர் "தமிழக வெற்றி கழகம்". இன்றைய தினத்தில் சுவாதி நட்சத்திரத்தில் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நட்சத்திரத்தில் தான் சனி உச்சம் என்று சொல்வார்கள். சனி என்றால் மக்கள் சக்தி கூட்டம் சேரும். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

தமிழக வரலாற்றில் நீண்டு நிலைத்திருக்க வாய்ப்புகள் அதிகம். பதவி என்று வரும்போது அந்த பதவியை வேறு யாருக்காவது கொடுத்து விட்டு அவர் கட்சி பணியை மட்டும் மேற்கொள்ள வாய்ப்புகள் அதிகம். இவர் ரொம்ப நல்லவர் என்று பெயர் எடுப்பார். ஆனால், அதிகாரம் கிடைப்பதற்கு கஷ்டம். சுவாதி என்றால் தேன்கூடு என்று கூட அர்த்தம் உண்டு. தேனை தேன் பூச்சிகளை ஏமாற்றி அந்த தேனை எடுத்துக் கொள்வதைப் போல் சதி செய்யவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கவனமாக கையாள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவின் சாராம்சமாக நடிகர் விஜய் பதவி என்று வரும்போது அதை வேறு யாருக்காவது கொடுத்துவிட்டு கட்சி பணியை மட்டும் மேற்கொள்ள வாய்ப்புகள் அதிகம் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார். இருப்பினும் ஜோதிட கணிப்புகள் நிறைவேறுமா? அல்லது நடிகர் விஜயின் அரசியல் கனவு நிறைவேறுமா? என்பதற்கு காலமும் வாக்காளர்களுமே முடிவு சொல்வார்கள் என்று உறுதியாக நம்பலாம்.

Tags :
Advertisement