For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழகமே பெரும் சோகம்...! கடலூரில் தெரு நாய் கடித்து ஒரு மாத குழந்தை உயிரிழப்பு...!

A one-month-old baby was bitten and mauled to death by a stray dog ​​near Cuddalore
06:05 AM Jun 28, 2024 IST | Vignesh
தமிழகமே பெரும் சோகம்     கடலூரில் தெரு நாய் கடித்து ஒரு மாத குழந்தை உயிரிழப்பு
Advertisement

கடலூர் அருகே பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையை தெரு நாய் ஒன்று கடித்து குதறி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திட்டக்குடி அடுத்த கொடிக்களம் கிராமத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தெரு நாய் கடித்து கொன்றுள்ளது.

Advertisement

குழந்தையின் தாய் வீட்டின் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில், வீட்டிற்குள் புகுந்து குழந்தையை நாய் கடித்து குதறியுள்ளது. இதையடுத்து, படுகாயமடைந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தையின் உயிர் பிரிந்தது. இதையடுத்து நாய் கடித்து உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் சென்னையில் வளர்ப்பு நாய், சிறுவன் மற்றும் சிறுமியை கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் நாய்கள் தொல்லை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. இரவு நேரங்களில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் தொல்லையாக உள்ளது. சில சமயங்களில் நாய்கள் வாகன ஓட்டிகளை கடிப்பதற்காக விரைகிறது.. இதனால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் தற்பொழுது எழுந்துள்ளது.

Tags :
Advertisement