For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நோ எக்ஸாம்.. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை..!! தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்?

A notification has been released for filling up 71 vacant posts at the shipyard in Kochi, a public sector enterprise owned by the central government.
03:52 PM Nov 14, 2024 IST | Mari Thangam
நோ எக்ஸாம்   மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை     தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
Advertisement

மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமான கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள 71 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்பதை இங்கு பார்க்கலாம்.

Advertisement

பணியிடங்கள் விவரம்:

1. சாரம் அமைப்பவர் (Scaffolder) - 21 பணியிடங்கள்

2. செமி ஸ்கில்டு ரிக்கர் - 50 பணியிடங்கள்.

கல்வி தகுதி : சாரம் அமைப்பவர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும். சாரம் அமைக்கும் பணியில் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும். செமி ஸ்கில்டு ரிக்கர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 4 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பணியில் குறைந்தது மூன்று ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு : இரண்டு பணியிடங்களுக்குமே 30-வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்காலம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு உண்டு. எஸ்.சி/எஸ்.டி பிரிவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 13 வயது ஆண்டும் வயது உச்ச வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் எவ்வளவு? இந்த பணி முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலானது ஆகும். தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு முதலாம் ஆண்டில் ரூ. 22,100/ம், இரண்டாம் ஆண்டில் ரூ. 22,800-ம், மூன்றாம் ஆண்டில் ரூ. 23,400ம் வழங்கப்படும். கூடுதல் பணி நேரம் வேலை செய்தால் ரூ.5,530 முதல் 5,850 வரை கிடைக்கும். மூன்று ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள்.

தேர்வு முறை : செய்முறை தேர்வு, உடல் தகுதி தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தர்வை ரூ.200 செலுத்த வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிப்பது எப்படி? தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். https://cochinshipyard.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பபிக்க அவகாசம் தொடங்கிய நாள்: 13.11.2024. விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.11.2024 ஆகும்.

Read more ; கள்ளக்காதலால் இரு வீட்டிலும் வெடித்த சண்டை..!! கதவை பூட்டிக் கொண்ட கணவன் – மனைவி..!! திறந்து பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி..!!

Tags :
Advertisement