இந்திய வரைபடத்தை தவறாக வெளியிட்ட செய்தி நிறுவனம்...! நோட்டீஸ் அனுப்பிய பிரஸ் கவுன்சில்...!
இந்திய வரைபடத்தை தவறாக வெளியிட்ட விவகாரம் தொடர்பாக பிரண்ட்லைன் பத்திரிகை மீது இந்திய பத்திரிகை கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னையிலிருந்து வெளியாகும் பிரண்ட்லைன் இதழின் அட்டைப்படத்தில், இந்திய வரைபடத்தை தவறாக வெளியிட்டதற்காக, அந்த இதழ் மீது இந்திய பத்திரிகை கவுன்சில் தாமாக முன்வந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அந்த பத்திரிகையின் 2024 ஆகஸ்ட் 10-23 தேதியிட்ட இதழில் வெளியான அட்டைப்படத்தில், இந்திய வரைபடத்தை தவறாக வெளியிட்டதற்காக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு, பத்திரிகையின் ஆசிரியருக்கு, இந்திய பத்திரிகை கவுன்சில் தலைவர் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தலைவர் ரஞ்சனா பிரகாஷ் தேசாய், ஆகஸ்ட் 10-23, 2024 தேதியிட்ட 'பிரண்ட்லைன்' இதழின் அட்டைப் பக்கத்தில் தவறான இந்திய வரைபடத்தைக் காட்டியது குறித்து தானாக முன்வந்து விசாரணை நடத்தியதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 8, 2024 அன்று பத்திரிகையின் ஆசிரியருக்குக் காரணம் காட்டப்பட்டுள்ளது.