முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சீனா : காதலர்களை தாக்கும் 'Love Brain Disorder' என்ற புதிய நோய் கண்டுபிடிப்பு!

11:32 AM May 07, 2024 IST | Mari Thangam
Advertisement

சீனாவில் காதலர்களைத் தாக்கும் புதிய நோய் ஒன்று வெளியுலகத்திற்கு வந்துள்ளது. சீனாவைச் சேர்ந்த ஷியாஹு என்ற 18 வயது பெண் ஒருவர் தன்னுடன் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இளைஞரும் அவரை காதலித்து வந்த நிலையில் இருவரும் மற்ற காதலர்களைப் போலவே செல்போனில் பேசுவது பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றுலா செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

Advertisement

இந்தநிலையில் ஷியாஹுவிற்கு இளைஞர் மீதான காதல் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அவர் தன்னை சார்ந்து இருக்க வேண்டும்; தன்னுடன் மட்டுமே பேச வேண்டும் என நினைத்த ஷியாஹு தொடர்ந்து தொலைபேசி மூலம் அவரை அழைத்துள்ளார். இதில் ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட முறை போன் செய்து காதலனிடம் விசாரிப்பது போன்ற செயல்கள் அந்த இளைஞருக்கு பெரும் வேதனையை அளித்துள்ளது.

அன்றாட செயல்களைக்கூட செய்ய முடியாத அளவுக்கு அடிக்கடி போன் வருவது குறித்து அப்பெண் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் அளவிற்கு சென்றுள்ளது. இருப்பினும் விடாத அப்பெண் 100க்கும் மேற்பட்ட முறை அவருக்கு போன் செய்துள்ளார். போனை எடுக்காததால் வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து உடைத்துள்ளார்.

இதனையடுத்து இளைஞரின் புகாரின் பேரில் அப்பெண்ணை கைது செய்த போலீசார், அவர் மருத்துவர் ரீதியாக பாதிக்கப்பட்டதை அறிந்து மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் அவருக்கு செய்த ஆய்வில் அவர் 'லவ் பிரைன் டிஸார்டர்' என்ற புதிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Tags :
attacks loversChinaLove Brain Disorder
Advertisement
Next Article