மீண்டும் அச்சுறுத்தி வரும் புதிய வகை கொரோனா..!! இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா..? ஆபத்து..!!
உலகையே புரட்டி போட்ட கொரோனாவை நம்மால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. கொரோனா பாதிப்புகள் முன்பை விட தீவிரமாக இல்லை என்றாலும், இன்னும் அந்த கொடிய தொற்று நம்முடனேயே தான் வாழ்ந்து வருகிறது என்று நிபுணர்கள் அவ்வப்போது எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் தான், சமீபத்தில் அமெரிக்காவில் கோவிட்-ன் 2 புதிய வேரியன்ட்ஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. “FLiRT” என குறிப்பிடப்படும் இந்த இரண்டு வேரியன்ட்ஸ்களிலும் KP.2 அடங்கும். மேலும், இது சமீபத்திய வாரங்களில் ஒமைக்ரானின் JN.1 சப்வேரியன்ட்டை முந்தியது.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான யு.எஸ் மையங்களின் சமீபத்திய தரவுகளின்படி, KP.2 நாடு முழுவதும் பதிவாகும் 4 நோய்த்தொற்று பாதிப்புகளில் ஒன்றுக்கு காரணமாக உள்ளது. மற்றொரு FLiRT வேரியன்ட் KP.1.1 ஆகும், இது அமெரிக்காவில் காணப்பட்டாலும் KP.2-ஐ விட குறைவாகவே பரவியுள்ளது. CDC-யின் சமீபத்திய தகவலின் படி, இது தற்போது நாடு தழுவிய நோய்த்தொற்றுகளில் சுமார் 7.5% ஆகும்.
அறிகுறிகள்
தொண்டை வலி, இருமல், சோர்வு, மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், தலைவலி, தசைவலி, காய்ச்சல் மற்றும் சுவை மற்றும் வாசனை இழப்பு போன்ற மற்ற ஒமைக்ரான் சப்-வேரியன்ட்ஸ்களின் அறிகுறிகளைப் போலவே புதிய FLiRT வேரியன்ட்ஸ் அறிகுறிகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவின் தொற்று நோய் சங்கம் தனது அறிக்கை ஒன்றில் KP.2 (Re)-ன் ரிலேட்டிவ் எஃபக்ட்டிவ் ரீப்ரொட்டக்ஷன் நம்பர், JN.1-க்கான Re-ஐ விட 1.22 மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று ஆரம்பகட்ட ஆய்வு தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கவனிக்க வேண்டிய பொதுவான கோவிட்-19 அறிகுறிகளில் காய்ச்சல் அல்லது சளி, இருமல், மூச்சுத் திணறல் அல்லது சுவாசிப்பதில் சிரமம், சோர்வு, தசை அல்லது உடல் வலி, தலைவலி, சுவை அல்லது வாசனை இழப்பு, தொண்டை புண், மூக்கில் நீர் வடிதல், குமட்டல் அல்லது வாந்தி, மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை அடங்கும். சில கடும் சந்தர்ப்பங்களில், கோவிட்-19 நிமோனியா, கடுமையான சுவாசக் கோளாறு மற்றும் உறுப்பு செயலிழப்பு உள்ளிட்ட சிக்கல்களுக்கு வழிவகுக்கும். குறிப்பாக, சுவாசிப்பதில் சிரமம் அல்லது தொடர்ந்து மார்பு வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
Read More : தமிழ்நாட்டில் தொடங்கியது கோடை மழை..!! அடுத்த 4 நாட்களுக்கு வெளுத்து வாங்கும் கனமழை..!! எங்கெங்கு தெரியுமா..?