For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

புதிய புயல்..? மிரட்டப்போகும் மழை..!! எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்..!!

A new low pressure area has formed over the Bay of Bengal, which may strengthen into a low pressure area in the next few days and move towards Odisha, the Chennai Meteorological Department said.
10:47 AM Aug 30, 2024 IST | Chella
புதிய புயல்    மிரட்டப்போகும் மழை     எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்
Advertisement

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், இது அடுத்த சில தினங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, ஒடிசா நோக்கி நகரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய மற்றும் அதனையொட்டிய வடக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும்.

அதற்கடுத்த இரண்டு தினங்களில், மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடர்ந்து, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும். தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றும் ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More : MLA வீட்டின் முன்பு தீக்குளித்த திமுக நிர்வாகி..!! சிகிச்சை பலனின்றி இன்று மரணம்..!!

Tags :
Advertisement