முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கொட்ட போகும் கனமழை...! ஜூலை 19-ம் உருவாக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...!

A new low pressure area will form on July 19.
06:21 AM Jul 17, 2024 IST | Vignesh
Advertisement

வங்கக் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஜூலை 19-ம் தேதி உருவாக வாய்ப்புள்ளது

வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய விதர்பா நில பகுதிகளில் நேற்று நிலவியது. இதற்கிடையே, ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஜூலை 19-ம் தேதி உருவாக வாய்ப்புள்ளது.

Advertisement

இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடியலேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கிமீவேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர்,திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரை பொருத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடக்கு அந்தமான், ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல்,கர்நாடக கடலோர பகுதிகள், கேரள கடலோர பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் இன்றும் நாளையும் அதிகபட்சமாக மணிக்கு 55 முதல் 65 கிமீவேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Tags :
Keralarainrain alertRain notificationRain tamilnadu
Advertisement
Next Article