நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! இந்த மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை..!!
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மேலும் வலுப்பெற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு நகர்ந்து நாளை, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது. இது அதற்கடுத்த இரண்டு நாட்களில் மேற்கு திசையில் நகர்ந்து தமிழக-இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளிலும் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நவ.11ஆம் தேதியில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழையும், நவ.12ஆம் தேதியில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கனமழையும் பெய்யும் வாய்ப்புள்ளது. நவ.13ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், நவ.14ஆம் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read More : நவம்பர் 23ஆம் தேதி கிராம சபைக் கூட்டம்..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!