அட்டகாசம்...! ஜல்லிக்கட்டு வீரர்கள் உயிரிழப்பை தடுக்க புதிய ஐடியா...! என்ன தெரியுமா...?
மாடுபிடி வீரர்களின் உயிரிழப்பை தவிர்ப்பதற்காக காளைகளின் கொம்புகளில் ரப்பர் குப்பி வைக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழக அரசு சார்பாக ஜல்லிக்கட்டு போட்டிக்கென மதுரை அலங்காநல்லூர் பகுதியில் சுமார் 66 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் 90% முடிவடைந்தது. இந்த மைதானத்தில் சுமார் 3,000க்கும் மேற்பட்டோர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு எங்கே நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வருடம் தோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் பாரம்பரிய இடங்களான அலங்காநல்லூரில் வருகின்ற ஜனவரி 17-ம் தேதியும், பாலமேட்டில் 16-ம் தேதியும், அவனியாபுரத்தில் 15-ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வழக்கம் போலவே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
மதுரை பழங்காநத்தம் அரசு கால்நடை மருத்துவமனையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை தொடங்கியது. மாடுபிடி வீரர்களின் உயிரிழப்பை தவிர்ப்பதற்காக காளைகளின் கொம்புகளில் ரப்பர் குப்பி வைக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். போதிய அளவில் பயன்பாட்டில் இல்லாததுடன் ஒரு ரப்பர் குப்பி 6 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுவதாக கூறி மாட்டின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.