For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"மாற்றம்" என்ற பெயரில் புதிய அறக்கட்டளை!. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் ஆசி பெற்ற ராகவா லாரன்ஸ்!.

Raghava Lawrence receives blessings from superstar Rajinikanth for Maatram Foundation
06:19 AM Jun 25, 2024 IST | Kokila
 மாற்றம்  என்ற பெயரில் புதிய அறக்கட்டளை   சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் ஆசி பெற்ற ராகவா லாரன்ஸ்
Advertisement

Rajini - Raghava: நடன இயக்குனராக இருந்து நடிகராக மாறிய ராகவா லாரன்ஸ், பல்வேறு அறக்கட்டளைகளை தொடங்கி ஆதரவற்றவர்களுக்கு வாழ்வு அளித்து வருகிறது. அந்தவகையில் தற்போது, "மாற்றம்" என்ற பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவக்கியுள்ளார். இந்த அறக்கட்டளை மூலம் தனது தொண்டு முயற்சிகளுக்கு பெயர் பெற்ற லாரன்ஸ், ஆதரவற்ற நபர்களுக்கான கல்வியை தீவிரமாக ஆதரித்து வருகிறார், இந்த அறக்கட்டளையில் முன்னணி நடிகர் எஸ் ஜே சூர்யா மற்றும் கலக்கப்போவது யாரு பாலா, செஃப் வினோத் அறந்தாங்கி நிஷா ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் மாற்றம் அறக்கட்டளை சார்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இது குறித்து தனது எக்ஸ்தள பதிவில், "தலைவர் சூப்பர் ஸ்டாரிடம் மாற்றம் அறக்கட்டளைக்கு ஆசீர்வாதம் வாங்க சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி எனவும் குருவே சரணம்" என சூப்பர் ஸ்டாருன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.

Readmore: Tn Govt: ரூ.36 கோடி செலவில் சென்னையில் 3 நிரந்தர பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண மையங்கள்…!

Tags :
Advertisement