முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அடிக்கடி கோளாறு கொடுத்த புது எலக்ட்ரிக் பைக்..!! ஆத்திரத்தில் ஷோரூமுக்கு தீவைத்த வாடிக்கையாளர்..!!

The incident of the owner of the bike setting fire to the electric bike showroom has created a stir.
08:20 AM Sep 12, 2024 IST | Chella
Advertisement

புதிதாக வாங்கிய எலக்ட்ரிக் பைக் மூன்றே நாளில் 2 முறை பழுதடைந்த விரக்தியிலும், ஆத்திரத்திலும் பைக்கின் உரிமையாளர் எலக்ட்ரிக் பைக் ஷோரூமிற்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கர்நாடக மாநிலம் பெங்களூரு கலபுர்கியில் ஹூமனாபாத் சாலையில் உள்ள ஓலா எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் முகமது நதீம் என்பவர் ஒரு எலக்ட்ரிக் பைக் வாங்கியுள்ளார். இந்த பைக்கை வாங்கியதில் இருந்தே பிரச்சனையாக இருந்துள்ளது. பைக் வாங்கிய மூன்று நாட்களில் இரண்டு முறை பழுதடைந்துள்ளது. இதனால், 2 முறையும் பைக்கை ஷோரூமிற்கு எடுத்துச் சென்று சரி செய்து வந்துள்ளார்.

ஆனாலும், எலக்ட்ரிக் பைக்கில் இருந்த பிரச்சனை சரியாகவில்லை என்று கூறப்படுகிறது. மீண்டும் பழுதடைந்ததால், ஆத்திரமடைந்த முகமது நதீம், ஷோரூமுக்கு சென்று ஊழியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளார். ஆனால், அது வாக்குவாதமாக மாறியது. புதிதாக வாங்கிய பைக் பிரச்சனையானது மற்றும் ஷோரூம் ஊழியர்களுடனான சண்டையின் விளைவாக, கடும் ஆத்திரமடைந்தார் முகமது நதீம்.

இதன் விளைவாக ஷோரூமில் இருந்த பைக்குகளின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தார். இதில், அங்கிருந்த அனைத்து பைக்குகளும், மற்ற சில பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகின. ஓலா எலக்ட்ரிக் பைக் ஷோரூமுக்கு தீ வைத்த முகமது நதீம், அங்கு தீயை வைத்துவிட்டு நேராக கலபுர்கி சவுக் காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறி சரணடைந்து விட்டார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read More : மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு..!! இனி இவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவசம்..!! குட் நியூஸ்..!!

Tags :
எலக்ட்ரிக் வாகனம்ஓலா வாகனம்பெங்களூரு
Advertisement
Next Article