புயலை தொடர்ந்து சென்னைக்கு வந்த புதிய ஆபத்து..!! மருத்துவமனைக்கு படையெடுக்கும் மக்கள்..!!
மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தண்ணீரில் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் அதீத மழைப்பொழிவால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு வாகனங்கள், வீடு, கடைகள் என அனைத்தையும் துவம்சம் செய்தது. இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், மழை வெள்ளத்தில் இருந்து சென்னை மக்கள் மீண்டு வரும் நிலையில், தற்போது புதிய ஆபத்து வந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக சிறுவர்கள் முதல்வர் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். காய்ச்சல், இருமல் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும். மேலும், அரசு சார்பில் உடனடியாக சிறப்பு மருத்துவ முகாமை ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.