முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

டீ கடைக்குள் திடீரென நுழைந்த மர்ம நபர்..!! மாநில தலைவர் துடிதுடித்து பலி..!! தப்பியோடிய கொலைகாரன்..!! நடந்தது என்ன..?

The murder of Rajaji, the state president of the Hindu Renaissance and Progress Front near Poontamalli by a mysterious person, has created a lot of excitement.
08:22 AM May 23, 2024 IST | Chella
Advertisement

பூந்தமல்லி அருகே இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி மாநிலத் தலைவர் ராஜாஜி, மர்ம நபரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜாஜி (45). இவர், இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி என்ற அமைப்பின் மாநில தலைவராக உள்ளார். இவர் நேற்று மாலை பூந்தமல்லி அருகே உள்ள குமணன்சாவடி, மாங்காடு சாலையில் உள்ள தேநீர் கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் வந்தார்.

பின்னர் தேநீர் கடைக்குள் நுழைந்து, தான் கொண்டுவந்த அரிவாளால் ராஜாஜியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். இதில், படுகாயமடைந்த ராஜாஜி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, ராஜாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : உங்களுக்கு 30 வயது ஆகிவிட்டதா..?நீங்கள் இதை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்..? மறந்துறாதீங்க..!!

Advertisement
Next Article