For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பணத்திற்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற மகளை விபச்சார தொழிலில் தள்ளிய தாய்..!! கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!!

Rasathi has an affair with Prem Naseer (53) from Sulur. This habit eventually turned into forgery.
09:54 AM Nov 14, 2024 IST | Chella
பணத்திற்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற மகளை விபச்சார தொழிலில் தள்ளிய தாய்     கோவையில் அதிர்ச்சி சம்பவம்
Advertisement

கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக பாலியல் தொழில் அதிகம் நடைபெறுவதாக புகார் எழுந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையில் சர்வதேச அளவிலான பாலியல் தொழில் கும்பல் ஒன்றை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கருமத்தம்பட்டி கிருஷ்ணாபுரம் அருகே ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்குள்ள ஒரு வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அது ராசாத்தி (41) என்ற பெண்ணின் வீடு.

Advertisement

இவருக்கு சண்முகசுந்தரம் என்பவருடன் திருமணம் ஆகியுள்ளது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த தம்பதிக்கு 20 வயதில் ஒரு பெண் உள்ளார். இதற்கிடையே, ராசாத்திக்கு சூலூரைச் சேர்ந்த பிரேம் நசீர் (53) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

பணத்திற்காக ராசாத்தியே, நசீருடன் இணைந்து தன் மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறையினர் அவர்கள் இரண்டு பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் உண்மையை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து ராசாத்தி, பிரேம் நசீர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராசாத்தியின் மகளை உளவியல் ஆலோசனைக்காக காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Read More : தமிழகத்தில் இங்கெல்லாம்தான் ஹாட்ஸ்பாட்… தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த கனமழை அலர்ட்!

Tags :
Advertisement