For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மெட்டாவுக்கு ரூ.213 கோடி அபராதம் விதித்த மத்திய அரசு…! முழு விவரம்..!

CCI slaps Rs 213 cr fine on Meta over WhatsApp’s 2021 privacy policy update
08:37 AM Nov 19, 2024 IST | Kokila
மெட்டாவுக்கு ரூ 213 கோடி அபராதம் விதித்த மத்திய அரசு…  முழு விவரம்
Advertisement

WhatsApp: வாட்ஸ் அப் தனியுரிமை கொள்கை புதுப்பிப்பதில் வணிக முறைகளை சரியாக பின்பற்றவில்லை என மெட்டா நிறுவனத்திற்கு ரூ.213 கோடி அபராதம் விதித்து இந்திய போட்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியில் , WhatsApp அதன் தனியுரிமைக் கொள்கையைப் புதுப்பிப்பதாக பயனர்களுக்கு அறிவித்தது. ஆனால்,வாட்ஸப் தனியுரிமை கொள்கை மூலம் வணிக முறைகளை சரியாக பின்பற்றவில்லை என குற்றம்சாட்டியது. இதனால், மெட்டா நிறுவனத்திற்கு ரூ.213 கோடி அபராதம் விதித்து இந்திய போட்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவின்படி போட்டி எதிர்ப்பு பிரச்சனைகள் தொடர்பாக, இந்திய போட்டி ஆணையம் தெரிவித்த கால அவகாசத்திற்குள் சில நடத்தை ரீதியிலான தீர்வுகளை செயல்படுத்த வேண்டும் என்று மெட்டா/வாட்ஸ்அப் நிறுவனத்திடம் கூறப்பட்டிருந்தது.

இணையவழி மூலம் தகவல் பரிமாற்றம் செய்யும் செயலி, இணைய வழி காட்சி விளம்பரம் ஆகிய இரண்டு சந்தைகளில் இந்தியாவில் மெட்டா ஆதிக்கம் செலுத்தி வந்தது கண்டறியப்பட்டதை அடுத்து, இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக இந்திய போட்டி ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: புற்றுநோய் சிகிச்சையில் தவளையின் விஷம்!. வலி நிவாரணிகள் தயாரிப்பு!. இத்தனை பயன்களா?

Tags :
Advertisement