நீட் தேர்வு முதல் ஆளுநர் பதவி அகற்றம் வரை.. தவெக நிறைவேற்றிய 26 தீர்மானங்கள் என்ன?
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அண்மையில் நடைபெற்றது. அதில், கொள்கை திருவிழா என்னும் பெயரில் முக்கிய அறிவிப்புகளை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார். இந்நிலையில், இன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 50-க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக செயற்குழுக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், பயணத்திட்டங்களை உருவாக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் தவெக செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
தவெக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 26 தீர்மானங்கள் :
கொள்கைகள், கொள்கை தலைவர்களை உறுதியாக பின்பற்றும் தீர்மானம்
கொள்கை திருவிழா மாநாட்டை மாபெரும் வெற்றி பெற வைத்த கழக நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம்
மதசார்ப்பற்ற சமூக நீதிக் கொள்கைகள் பற்றிய விளக்க தீர்மானம்
ஜனநாயக கொள்கை தீர்மானம்
பெண்கள் பாதுகாப்பு கொள்கை தீர்மானம்
சமூக நீதிக் கொள்கை தீர்மானம்
மாநில தன்னாட்சி உரிமை கொள்கை தீர்மானம்
விவசாய நிலங்கள் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம்
கோவை மெட்ரோ ரயில் திட்ட பணிகளை விரைந்து தொடங்க கோரும் தீர்மானம்
ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தீர்மானம்
மொழி கொள்கை தீர்மானம்
மக்கள் மீது நிதிச் சுமை திணிப்பு சார்ந்த தீர்மானம்
சட்டம் - ஒழுங்கு சீர்கேடு சார்ந்த தீர்மானம்
மின்சார கட்டணத்தை மாற்றியமைக்க தீர்மானம்
மதுக்கடைகளை மூட வலியுறுத்தல் கொள்கை தீர்மானம்
உச்ச நீதிமன்ற கிளையை அமைக்க வலியுறுத்தும் தீர்மானம்
தமிழ்நாட்டின் தொன்மப் பெருமை பாதுகாப்பு தீர்மானம்
விடுதலை போராட்டத் தியாகிகளுக்கு பெருமை சேர்க்க வலியுறுத்தும் தீர்மானம்
கண்ணயமிகு காயிதே மில்லத் பெயரில் அரசு விருது வழங்க வலியுறுத்தும் தீர்மானம்
முதியோர் நல்வாழ்வை உறுதி செய்ய தீர்மானம்
இயற்கை வளப் பாதுகாப்பு கொள்கை தீர்மானம்
இஸ்லாமியர் உரிமைத் தீர்மானம்
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் தீர்மானம்
தகைசால் தமிழர் விருது வழங்கும் அரசை வரவேற்கும் தீர்மானம்
Read more ; ஜார்கண்ட் தேர்தல் : இலவச சிலிண்டர் முதல் வேலை வாய்ப்பு வரை.. பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அமித்ஷா..!!