For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"ஒரு தடவை சொன்னா புரியாதா…" சிறுமிக்கு காதல் தொல்லை! அண்ணன் எடுத்த விபரீத முடிவு.!

06:52 PM Nov 17, 2023 IST | 1Newsnation_Admin
 ஒரு தடவை சொன்னா புரியாதா…  சிறுமிக்கு காதல் தொல்லை  அண்ணன் எடுத்த விபரீத முடிவு
Emergency warning red and blue roof mounted police LED blinker light bar turned on
Advertisement

காதலை கைவிடக் கூறியும் மறுத்து வந்ததால் இளைஞர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் அண்ணன் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த தும்பேறி பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன் முரளி(22). கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் முரளி அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு சிறுமியை திருமணம் செய்வதற்காக அழைத்துச் சென்றிருக்கிறார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சிறுமியை மீட்ட காவல்துறையினர் முரளியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணையும் நடைபெற்று வரும் நிலையில் முரளி மீண்டும் சிறுமியை சந்தித்து பேசி வந்திருக்கிறார். இது தொடர்பாக சிறுமியின் அண்ணன் சந்தோஷ் என்பவர் முரளியை பலமுறை கண்டித்துள்ளார். எனினும் முரளி சிறுமியுடன் பேசுவதை நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் முரளியை கத்தியால் குத்தி படுகொலை செய்தார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்த முரளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சிறுமியின் அண்ணன் சந்தோஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
Advertisement