முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அலறியடித்த மக்கள்...! ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவில் 3.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்...!

06:16 AM Jan 04, 2024 IST | 1newsnationuser2
Advertisement

ஜம்மு காஷ்மீரில் இன்று நள்ளிரவு 3.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் இன்று நள்ளிரவு 3.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை நில அதிர்வுக்கான தேசிய மையம் உறுதி செய்துள்ளது. நள்ளிரவு 12.38 மணி அளவில் பூமிக்கு அடியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மியான்மர், இந்தோனேசியா, ஜப்பான், ஆப்கானிஸ்தான் என பல்வேறு நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஜப்பான் நாட்டில் சுமார் 62 பேர் உயிரிழந்தனர்.

Advertisement

ஜப்பான் நிலநடுக்கம்

ஜனவரி 1-ம் தேதி ஜப்பானில் முதல் நிலநடுக்கம் பதிவானது. நோட்டோ தீபகற்பத்தில் இஷிகாவா மாகாணத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதன் தாக்கம் 7.6 ரிக்டராகப் பதிவானது. ஆனால் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டன. அவை 3.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் வரை பதிவானது. அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தற்பொழுது சுனாமிக்கான எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Next Article