உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!! கனமழை கொட்டித் தீர்க்கப் போகுது..!! இந்திய வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!
அரபிக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இந்நிலையில், இன்று லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இது, வட மேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த மூன்று நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறக்கூடும். இதன் காரணமாக கேரள மாநிலத்தில் பத்தினம்திட்டா, ஆழப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், இந்தப் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக வரும் நாட்களில் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, கரூர், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், மதுரை, தேனி, கள்ளக்குறிச்சி ஆகிய 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read More : விவசாயிகளே இனி கவலை வேண்டாம்..!! நடைமுறைக்கு வரும் மத்திய அரசின் மாஸ் திட்டம்..!!