For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வங்கக் கடலில் மீண்டும் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! கனமழை வெளுத்து வாங்கும்..!!

The Indian Meteorological Department said that due to atmospheric circulation in the Central Andaman Sea, a low pressure area will form again in the Bay of Bengal tomorrow (October 21).
03:54 PM Oct 19, 2024 IST | Chella
வங்கக் கடலில் மீண்டும் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி     கனமழை வெளுத்து வாங்கும்
Advertisement

வங்கக்கடலில் நாளை மறுநாள் (அக்.21) மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

வங்கக்கடலில் கடந்த 14ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதன் காரணமாக சென்னை வட மாவட்டங்களில் கடந்த 16ஆம் தேதி கனமழை பெய்தது. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, சென்னைக்கு அருகே வடக்கே எண்ணூரை ஒட்டி 17.10.2024ஆம் தேதி கரையை கடந்தது.

இந்நிலையில், அரபிக்கடலில் 12 மணி நேரத்திலும், வங்கக் கடலில் 22ஆம் தேதியும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “மத்திய கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. 2 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும்.

வங்கக்கடலில் 22ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, 24ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இன்று, நாளை, நாளை மறுநாள் மற்றும் அக்டோபர் 24ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கடல் சீற்றத்தால், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்றும், நாளையும் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகளாலும், தமிழ்நாட்டிற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சியால், ஒரு நாள் முன்கூட்டியே அதாவது வங்கக்கடலில் நாளை மறுநாள் (அக்.21) மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். அது வலுப்பெற்று வரும் 23ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்” என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More : மகளிர் உரிமைத்தொகை..!! செம குட் நியூஸ் சொன்ன உதயநிதி..!! விரைவில் உங்களுக்கும் ரூ.1,000 வரப்போகுது..!!

Tags :
Advertisement