For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! இன்று முதல் சம்பவம் இருக்கு..!! வானிலை அலர்ட்..!!

It has been reported that Tamil Nadu, Puducherry and Karaikal regions are likely to receive moderate rain for 7 days from today due to the low pressure area formed over the Bay of Bengal.
12:26 PM Aug 02, 2024 IST | Chella
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி     இன்று முதல் சம்பவம் இருக்கு     வானிலை அலர்ட்
Advertisement

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக் கூடும். இதன் காரணமாக கேரளாவில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அதேபோல் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில், ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்று வடக்கு கர்நாடகாவில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திராவில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More : ”நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது”..!! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

Tags :
Advertisement