அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி!. 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!. வானிலை ஆய்வு மையம்!.
Heavy Rain: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 10 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வடக்கு, வடமேற்கில் இருந்து தமிழகம் நோக்கி வீசும் வெப்பக்காற்று காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இது, மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரளா மற்றும் தமிழக தென் மாவட்டங்களின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது.
இது தொடரும் நிலையில், லட்சத்தீவுகள், தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்ன லுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக். 13 வரை மழை தொடர வாய்ப்பு உள்ளது.
மேலும் இன்று திருநெல்வேலி, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை திருநெல்வேலி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, ஈரோடு, துாத்துக்குடி, ராமநாதபுரம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
Readmore: ‘Zero Water Days!.பெங்களூரில் வரலாறு காணாத தண்ணீர் நெருக்கடி!. எச்சரித்த நிபுணர்கள்!.