முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நோட்...! இந்த 3 மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை...! பள்ளி, கல்லூரிகளுக்கு லீவ்...!

A local holiday has been declared today in Salem, Erode and Tirupur districts
05:55 AM Aug 03, 2024 IST | Vignesh
Advertisement

சேலம், ஈரோடு திருப்பூர் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடி 18, ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு இன்று, சேலம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஈரோடு மாவட்டத்தில் தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு, இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது. மேலும், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, மாவட்ட கருவூலம் மற்றும் சார் நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல, திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே மேலப்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்து, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி, திருப்பூர் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
holidayLocal holidaySalem dttirupur
Advertisement
Next Article