For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்து பயிற்சி வகுப்பு...! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு...!

A live class training on “Entrepreneurship – Digital Marketing” is going to be held in Chennai.
07:42 PM Aug 07, 2024 IST | Vignesh
டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்து பயிற்சி வகுப்பு     தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு
Advertisement

சென்னையில் "தொழில் முனைவோர்- டிஜிட்டல் மார்க்கெட்டிங்' தொடர்பான வகுப்புப் நேரடிப் பயிற்சி நடைபெற உள்ளது.

Advertisement

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் "தொழில் முனைவோர்- டிஜிட்டல் மார்க்கெட்டிங்' தொடர்பான வகுப்புப் நேரடிப் பயிற்சியானது 21.08.2024 முதல் 23.08.2024 வரை மூன்று நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை இந்நிறுவன கட்டிட வளாகத்தினுள் நடைபெற உள்ளது.

"தொழில்முனைவோர்-டிஜிட்டல் மார்க்கெட்டிங் அறிமுகம் டிஜிட்டல் மார்க்கெட்டிங், தரவு கையாளுதல், சைபர் கொள்கை (விதிமுறைகள் & நிபந்தனைகள்) மார்க்கெட்டிங் உத்திகள், போட்டி சந்தைப்படுத்துதல், சமூக ஊடக தரவு, டிஜிட்டல் இருப்பு. தேவை மற்றும் வாடிக்கையாளர்களை இணைத்தல், டிஜிட்டல் ஆன்லைன் கருவிகள் மற்றும் ஆதரவு அமைப்பு ஆகியவை தலைப்புகளின் கீழ் உள்ளடக்கப்பட்ட பாடங்கள். டிஜிட்டல் மார்க்கெட்டிங் அறிமுகம், அடிப்படை, போக்குகள் மற்றும் முக்கியத்துவம்.

டிஜிட்டல் நிலப்பரப்பைப் புரிந்துகொள்வது: சமூக ஊடகங்கள், எஸ்.சி.ஓ மற்றும் கட்டண விளம்பரம், இலக்கு பார்வையாளர்களை அடையாளம் காணுதல்: உத்திகள் மற்றும் பார்வையாளர்களைப் பிரித்தல், டிஜிட்டல் இருப்பை உருவாக்குதல், சந்தை தேவைகளை உருவாக்குதல், வருவாய் மற்றும் வருவாய் மாதிரிகளை உருவாக்குதல், டிஜிட்டல் வணிக தீர்வுகள், இணைப்பு மற்றும் நெட்வொர்க்குகள் போன்ற பாட தலைப்புகள் பயிற்சியில் இடம்பெறும்.

ஆர்வமுள்ளவர்கள் (ஆண் /பெண்/ திருநங்கைகள்) 18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் பங்குப் பெறும் ஆண் / பெண்/ திருநங்கைகள் தங்கிப் பயில்வதற்கு ஏதுவாக குறைந்த கட்டண வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து முன் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், இப்பயிற்சிப் பற்றிய விவரங்களை அறிய / பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement