ஒரே நாளில் ஒரே போடாக போட்ட மின்னல்..!! 11 லட்சம் முறையாம்..!! குழம்பி போன ஆய்வாளர்கள்..!!
பொதுவாக மழை பெய்யும் போது மின்னல் தாக்கும் இயல்புதான். மழை பெய்யும் போது அதிகபட்சம் சில முறை இடி இடிக்கும். ஆனால், ஒரே நாளில் சுமார் 11 லட்சம் முறை மின்னல் தாக்கியுள்ள சம்பவம் ஆராய்ச்சியாளர்களையே திணற வைத்துள்ளது.
மழைக் காலங்களில் நாம் பொதுவாக அஞ்சுவது என்னவோ மின்னலை பார்த்துத் தான். ஏனென்றால், நொடிப் பொழுதில் தாக்கும் மின்னலால் உயிரிழப்புகளும் கூட ஏற்படும். சில நொடி மட்டுமே நீடிக்கும் மின்னல், மிகவும் சக்திவாய்ந்தவை. ஆனால், எல்லா நேரங்களிலும் மின்னல் தாக்காது. மின்னல் ஏற்பட சரியான சூழல் அமைய வேண்டும் என்பதால் பொதுவாக ஒரு நாளைக்கு சில முறை மட்டுமே மின்னல் தாக்கும்.
ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவை சுமார் 11 லட்சம் முறை மின்னல் தாக்கியுள்ளன. உலகில் வேறு எங்கும் ஒரே நாளில் இத்தனை முறை மின்னல் தாக்கியதே இல்லை. மத்திய ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில், அப்போது தான் இந்தளவுக்கு மின்னல் தாக்கியுள்ளன. குறுகிய நேரத்தில் இந்தளவுக்கு மின்னல் தாக்கியது வல்லுநர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
குறிப்பாக, உளுருவில் என்ற பகுதியில் மட்டும் 7.19 லட்சம் முறை மின்னல் தாக்கியுள்ளது. அதேபோல தென்கிழக்கு குயின்ஸ்லாந்து பகுதியிலும் கடுமையான மழை பெய்த நிலையில், அங்கு 3.28 லட்சம் முறை ஒரே நாளில் மின்னல்கள் தாக்கியுள்ளன. வடக்கு ஆஸ்திரேலியாவில் சுமார் 95,000 மின்னல் தாக்குதல்கள் நடந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. திடீரென இந்தளவுக்கு மின்னல் ஏற்பட்டது எப்படி என்று ஆய்வாளர்களே கூட குழம்பிப் போய் உள்ளனர்.
இது தொடர்பாக அந்நாட்டின் வல்லுநர்கள் கூறுகையில், "பொதுவாக மத்திய ஆஸ்திரேலியா, தெற்கு ஆஸ்திரேலியா என்பது வறண்ட பகுதிகள். இந்த பகுதியில் புயல் மற்றும் மின்னல் குறைவாகவே இருக்கும். ஆனால், இப்போது நேர்மாறான ஒரு நிகழ்வு அங்கு நடந்துள்ளது. மத்திய ஆஸ்திரேலியா பகுதியில் ஏற்பட்ட ஒரு புயலும், கிழக்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட புயலும் ஒரே இடத்தில் சந்தித்ததே இதற்குக் காரணமாகும்" என்கிறார்கள்.
Read More : மது ஊற்றிக் கொடுத்து மாணவிகளின் வாழ்க்கையில் விளையாடிய பிடி மாஸ்டர்..!! விடுதி அறையில் நடந்த விபரீதம்..!!