சுனிதா வில்லியம்ஸுக்கு என்ன ஆச்சு?. 50 நாட்களை கடந்த பயணம்!. ஆய்வாளர்களின் அதிர்ச்சி தகவல்!
Sunitha Williams: விண்வெளி பயணத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்ப முடியாமல் 50 நாட்களாக சிக்கியுள்ள சிசுனிதா வில்லியம்ஸிற்கு நாளடைவில் தசை நார் பலவீனமடைந்து செயல்பாடுகள் குறையும். எலும்பும் பலவீனமடைந்து உடையும் வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்வெளியில் சிக்கியுள்ளனர். இரண்டு விண்வெளி வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு வாரம் கழித்து பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர், அப்போது அவர்களின் விமானம் போயிங் ஸ்டார்லைனர் செயலிழந்து விண்வெளியில் சிக்கிக்கொண்டது.
ஜூன் 13 அன்று சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு வரவிருந்தனர், ஆனால் போயிங் ஸ்டார்லைனர் செயலிழந்ததால், அவர்கள் எப்போது பூமிக்கு திரும்ப முடியும் என்று நாசாவால் இன்னும் சொல்ல முடியவில்லை. இதுவரை 50 நாட்களை கடந்துவிட்டநிலையில் விண்வெளியில் அவர்களின் நிலை குறித்து ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர்.
விண்வெளியில் புவியீர்ப்பு விசை பூஜ்ஜியமாக இருக்கும். இதில் தசைகள், எலும்புகளுக்கு எடையை தூக்கும் வேலை கிடையாது. நாளடைவில் தசை நார் பலவீனமடைந்து செயல்பாடுகள் குறையும். எலும்பும் பலவீனமடைந்து உடையும் வாய்ப்பு உள்ளது. விண்வெளியில் அதிக நாள் இருப்பதால் கண்களில் அழுத்தம் அதிகரித்து பார்வை மங்கும், இரட்டை பார்வை தோன்றும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Readmore: ஆடி அமாவாசை!. தோஷம் நீங்க திதி கொடுங்கள்!. பூர்வ புண்ணியம் கிடைக்கும்!.