2000 கி.மீ பயணம்!. 100 போர் விமானங்கள் மூலம் ஈரான் மீது தாக்குதல்!. 25 நாட்களுக்கு பிறகு பழித்தீர்த்த இஸ்ரேல்!
Israel - Iran: ஈரானின் ராணுவ நிலைகளை குறிவைத்து 100 போர் விமானங்கள் மூலம் இஸ்ரேல் குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 1ம் தேதி ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக இஸ்ரேல் கூறி உள்ளது. கடந்த 1979ம் ஆண்டில் ஈரானிய புரட்சி ஏற்பட்ட காலத்தில் இருந்தே ஈரானும், இஸ்ரேலும் பரம எதிரிகளாக இருந்து வருகின்றன. இஸ்ரேலை அழிக்க வேண்டுமென ஈரான் நாட்டு தலைவர்கள் வெளிப்படையாக பேசினர்.
இதற்கு பதிலடி கொடுக்க காத்திருந்த இஸ்ரேல் சுமார் 25 நாட்கள் கழித்து நேற்று ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. துல்லியமாக ஈரான் நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதல்களை சில மணிநேரங்களிலேயே நடத்தி முடித்துள்ளது இஸ்ரேல். இதற்காக 100 க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய F-35 'Adir' ஸ்டெல்த் ஃபைட்டர்கள் விமானங்கள் 2000 கிலோமீட்டர்கள் பயணித்து ஈரான் வானுக்குள் வந்துள்ளன. ஈரான் அணுசக்தி நிலையங்களுக்கும் எண்ணெய் கிணறுகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் துல்லியமாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
மூன்று கட்டங்களாக நடந்த இந்த தாக்குதலில் முதற்கட்டமாக ஈரான் பாதுகாப்பு அமைப்பிகள் தாக்கப்பட்டன. இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை தாக்குதலில் ஈரானின் மிசைல்கள் மற்றும் டிரோன்கள் உள்ள தளவாடங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் உள்ள துல்லியத்தன்மை இதை இஸ்ரேல் வெகு காலமாக நன்கு திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளது புலனாகிறது. இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் சிரியா, ஈராக் என மற்ற நாடுகள் உள்ளதால் மிகவும் தொலைவில் இருக்கும் ஈரானை ஏவுகணை மூலம் தாக்கினால் அணுசக்தி நிலையங்கள் மீது ஏவுகணைகள் விழலாம். அது சர்வதேச சிக்கலில் முடியும். எனவே பைட்டர் பிளேன்களை 2000 கிலோமீட்டர் அனுப்பி மட்டுமே இந்த தாக்குதலை செயல்படுத்த முடியும் என்று இஸ்ரேல் யோசித்து இந்த தாக்குதலை திட்டமிட்டமிட்டிருக்கிறது.
Readmore: இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவு!. பிரதமர் மோடியின் ‛மான்கி பாத்’ நிகழ்ச்சி சாதனை!.