For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'சென்னையில் 14 ஏக்கரில் பிரம்மாண்ட அரண்மனை!' இப்போதும் வாழும் மன்னர் குடும்பம்!! பலருக்கு தெரியாத தகவல்!!

A huge palace in 14 acres in Chennai! The royal family is still alive.
02:58 PM Jun 19, 2024 IST | Mari Thangam
 சென்னையில் 14 ஏக்கரில் பிரம்மாண்ட அரண்மனை   இப்போதும் வாழும் மன்னர் குடும்பம்   பலருக்கு தெரியாத தகவல்
Advertisement

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் தற்போதைய தமிழ்நாடு மெட்ராஸ் மகாணம் என்று அழைக்கப்பட்டது. சென்னை, மெட்ராஸ் என அழைக்கப்பட்டது. இதனிடையே இப்பகுதியில் இருந்த மன்னர்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? அவரின்களின் அரண்மனைகள் இப்போது கூட சென்னையில் உள்ளது. சென்னையில் முக்கிய பகுதியாக இருக்கும் ராயப்பேட்டையில் 14 ஏக்கரில் ஒரு பெரிய அரண்மனை இருக்கிறது. இங்கு தற்போதும் மன்னர் குடும்பத்தினரின்  வம்சாவழியினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த அரண்மனை குறித்த தகவல்களை பற்றி பார்க்கலாம்.

Advertisement

சென்னை கடற்கரை அருகில் அமைந்துள்ள சேப்பாக்கத்தில் தான் ஆற்காடு நவாப்பின் அரண்மனை அமைக்கப்பட்டு இருந்தது. 1768 ஆம் ஆண்டு முதல் 1855 ஆம் ஆண்டு வரை ஆற்காடு நவாப் அங்கு தான் வாழ்ந்து வந்தனர். 1855 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களில் வாரிசு இழப்புக் கொள்கையின் படி, ஆற்காடு நவாப்பின் ஆட்சியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். அதன் பிறகு, திருவல்லிக்கேணி பிரதான சாலையில் ஷாதி மஹால் என்ற சிறிய இடத்தில் ஆற்காடு நவாப்பின் குடும்பம் வாழ்ந்துவந்தனர்.

ஆற்காடு நவாப்பிற்கு அந்த சிறிய இடம் சரியானது இல்லை என்று கருதிய ஆங்கிலேயர்கள் ராயபேட்டையில் இருக்கும் அமீர் மஹால் என்ற பெரிய அரண்மனையை அளித்தனர். இந்தோ சர்செனிக் முறையில் கட்டப்பட்ட அமீர் மஹால் நவாப் குடும்பம் வசிப்பதற்கான இடமாக மாற்றினர். முகமது அப்துல் அலி நவாப் தற்போதைய ஆற்காடு நவாப்பின் மன்னராக உள்ளார். இவர் அவரின் குடும்பத்துடன் அமீர் மஹால் அரண்மனையில் வசித்து வருகின்றனர். இதனிடையே அவர்கள் ஆரம்ப காலத்தில் வாழ்ந்து வந்த “சேப்பாக்கம் அரண்மனை” அரசு உடமையாக்கப்பட்டு தற்போது தமிழ்நாடு அரசின் அலுவலகமாக செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more ; சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த குட்டி ஐசு-வ நியாபகம் இருக்கா?இப்போ ஆளே மாறிட்டாங்க!! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

Tags :
Advertisement