வேறு கண்ணில் அறுவை சிகிச்சை.. அலட்சியமா பதில் சொன்ன மருத்துவர்..!! 7 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..
நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் ஏழு வயது சிறுவனுக்கு இடது கண்ணில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த யுதிஷ்டிர் என்ற 7 வயது சிறுவனின் இடது கண்ணில் அடிக்கடி நீர் வழிந்துள்ளது. இதனால், சிறுவனின் பெற்றொர் அவரை கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனை சோதித்து பார்த்த மருத்துவர் ஆனந்த வர்மா, சிறுவனின் கண்னில் மெல்லிய பிளாஸ்டிக் போன்ற பொருள் இருப்பதாகவும், சிறிய அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்றிவிடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பெற்றோரின் சம்மதத்துடன் சிறுவனின் கண்ணில் நேற்று முன்தினம் (நவ.12) அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்து சிறுவனை வீட்டிற்கு அழைத்துச் சென்ற பெற்றோர் சிறுவனின் இடது கண்ணுக்கு பதிலாக தவறுதலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் மருத்துவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். ஆனால் அவரும், அவரது ஊழியர்களும் அலட்சியமாக பதில் கூறியுள்ளன. இதனையடுத்து சிறுவனின் குடும்பத்தினரால் மருத்துவமனையில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் கௌதம் புத்த நகரின் தலைமை மருத்துவ அதிகாரியிடம் (CMO) புகார் அளித்தனர். மேலும், சிறுவனின் தந்தை அளித்த புகாரில், மருத்துவரின் உரிமத்தை ரத்து செய்யவும், மருத்துவமனைக்கு சீல் வைக்கவும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக விசாரணை தொடங்கியுள்ளதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸார் தெரிவித்தனர்.
Read more ; நோ எக்ஸாம்.. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை..!! தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்?