For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆண் துணை இல்லாமல் 2023-ம் ஆண்டில், 4000-க்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பம்...!

09:04 AM Dec 16, 2023 IST | 1newsnationuser2
ஆண் துணை இல்லாமல் 2023 ம் ஆண்டில்  4000 க்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பம்
Advertisement

2018-ம் ஆண்டு ஹஜ் பயணத்தில் ஆண் துணை இல்லாமல் பெண்கள் பங்கேற்பதற்கான (எல்.டபிள்யூ.எம்) பிரிவு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது, அன்றிலிருந்து இந்தப் பிரிவின் கீழ் மேலும் பெண்கள் விண்ணப்பித்தலை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. 2023-ம் ஆண்டில், 4000-க்கும் மேற்பட்ட பெண்கள் இப்பிரிவின் கீழ் விண்ணப்பம் செய்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

இந்தப் புனித ஆன்மீக யாத்திரையைச் செய்ய ஆண் துணையை மெஹ்ரம் அவர்கள் சார்ந்திருந்திருக்க வேண்டியிருந்தது. 2018-ம் ஆண்டில் 45 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள் ஹஜ் பயணத்திற்கு மெஹ்ரம் இல்லாமல் விண்ணப்பிக்க அனுமதித்ததன் மூலம் மத்திய அரசால் இந்தக் கட்டுப்பாடு நீக்கப்பட்டது, இதில் தகுதியான பெண்கள் நான்கு (4) குழுக்களாக எல்.டபிள்யூ.எம் பிரிவின் கீழ் புனித யாத்திரை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.ஹஜ் -2023-ல், முதல் முறையாக, எல்.டபிள்யூ.எம் பிரிவின் கீழ் ஒற்றை தகுதியுள்ள பெண்களும் ஹஜ் -2023 க்கு விண்ணப்பிக்க மத்திய அரசு அனுமதித்தது.

இந்த நடவடிக்கையின் விளைவாக 2023 -ம் ஆண்டு ஹஜ் பயணத்தில் 4000-க்கும் மேற்பட்ட வெற்றிகரமான பெண் விண்ணப்பதாரர்களுடன் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக பங்கேற்பு ஏற்பட்டது, இது அதிக நம்பிக்கை, தனிப்பட்ட சுதந்திரம், அதிகரித்த சமூக இயக்கம் ஆகியவற்றிற்கு வழிவகுத்தாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement