முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"முஸ்லீம்கள் வசிக்கும் பகுதியில் வீடு வாங்காதீங்க..!!" - பெண் பத்திரிக்கையாளரின் பதிவால் சர்ச்சை!!

A Hindu woman journalist, named Amrapali Sharma, has shared several videos on social media alleging harassment and threat to her life from communal Muslims living in her neighbourhood in Malad, Maharashtra.
08:33 AM Jul 30, 2024 IST | Mari Thangam
Advertisement

அம்ரபாலி ஷர்மா என்ற இந்து பெண் பத்திரிகையாளர், பல வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் மகாராஷ்டிராவின் மலாடி பகுதியில் நான் வசித்து வருகிறேன். இங்கு வசிக்கும் முஸ்லீம்கள் எங்களை அதிகம் துன்புறுத்துகிறார்கள், பெண்களுக்கு ஆபத்து அதிகம் உள்ளது என பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அந்த பெண்ணின் பதிவில், முஸ்லீம்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியில் வசிக்கும் வகுப்புவாத மக்கள் இந்துக்களை துன்புறுத்துகிறார்கள், அச்சுறுத்துகிறார்கள், தற்கொலை செய்து கொள்ளவும், தங்கள் வணிகங்களையும் வீடுகளையும் விற்க தூண்டுகிறார்கள். அவர்கள் இந்துக்களை இப்பகுதியை விட்டு வெளியேறும்படி வற்புறுத்துகிறார்கள் என்று அவர் குற்றம் சாட்டினார். மேலும், அவர்கள் வேண்டுமென்றே இந்துக்களை துண்புறுத்துகிறார்கள். எங்கள் வீட்டு வாசலில் இறைச்சியை வீசுகிறார்கள் எனவும் அந்த பெண் குற்றம் சாட்டினார்..

மற்றொரு வீடியோவில் சாலையில் சுற்றித்திரியும் விலங்குகளுக்கு உணவு அளிக்கும் போது அந்த நபரிடம் ஒருவர் தகறாரு செய்யும் வீடியோவை பகிர்ந்து, முஸ்லீம்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் பெண்கள் வீடு வாங்காதீர்கள் என கூறியுள்ளார். முஸ்லிம்கள் பாகுபாடு காட்டுவதாகக் குற்றம் சாட்டுகிறார்கள், ஆனால் தங்கள் பகுதியில் இந்துக்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகிறார்கள்: மத அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாக அம்ரபாலி சர்மா குற்றம் சாட்டினார்

மேலும் ஒரு வீடியோவில், முஸ்லீம்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியில் ஒரு இந்து பெண் வீடு வைத்திருப்பது தவறா? நான் மதச்சார்பற்றவள், ஆனால் ஒரு இந்துவாக, என் இருப்புக்காக நான் போராட வேண்டும். இந்துவாக இருப்பது குற்றமா? இந்துவாக இருப்பதால், நாட்டின் எந்த மூலையிலும் வசிக்க முடியாது என்று தெரிகிறது. இந்துக்கள் என்பதால் சிலர் வீடு தர யோசிக்கிறார்கள் என்றார்.

சிறுபான்மையினர் பாகுபாடுகளை எதிர்கொள்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், நான் பாகுபாடு காட்டப்படுகிறேன். இந்த நபர்கள் என்னைக் கொன்று விடுவதாக மிரட்டுவதால் என்னுடன் பெப்பர் ஸ்பிரே எடுத்துச் செல்கிறேன். எதிர்காலத்தில் எனக்கு ஏதாவது நேர்ந்தால், இந்தப் பகுதியில் வாழும் இந்தச் சமூகமே அதற்கு காரணம் எனக் கூறி பதிவை முடித்தார்.

Read more ; கார்கில் II!. உக்ரைன் போரின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி!. சதி செய்யும் அமெரிக்கா!.

Tags :
Hindu woman journalistmaharashtrasocial media
Advertisement
Next Article