புத்தாண்டு தொடங்கியதுமே பெரும் சோகம்..!! இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் போலீஸ் உள்பட 68 பேர் பலி..!!
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிறுவர்கள் உள்பட 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் ராணுவம் காசாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 45,000 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். அல் மவாஸி பகுதியில் தற்காலிக முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கடும் குளிர் அடித்து வரும் நிலையில், வீடு, உடமைகளை இழந்த மக்கள் இந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தான், புத்தாண்டு தொடங்கிய மறுநாளே இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், சிறுவர்கள், போலீஸ் அதிகாரிகள் உட்பட 68 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அக்டோபர் 7, 2023 அன்று தெற்கு இஸ்ரேலிய எல்லை வழியாக ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்க காஸா பகுதியில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.