For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கருணை அடிப்படையில் வேலை கேட்டு வந்தவரை கருணையே இல்லாமல் டார்ச்சர் செய்த அரசு அதிகாரி..!! தட்டித் தூக்கிய போலீஸ்..!!

A government official who sexually harassed a young woman who had requested a job on compassionate grounds after her father died has been arrested and imprisoned.
04:59 PM Jan 13, 2025 IST | Chella
கருணை அடிப்படையில் வேலை கேட்டு வந்தவரை கருணையே இல்லாமல் டார்ச்சர் செய்த அரசு அதிகாரி     தட்டித் தூக்கிய போலீஸ்
Advertisement

தந்தை இறந்துவிட்டதால், கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரிய இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு அதிகாரி, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement

சேலத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணின் தந்தை தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அவர், இறந்துவிட்ட நிலையில், கருணை அடிப்படையில் தனக்கு பணி வழங்க வேண்டுமென அவரது மகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த தேவராஜனை சந்தித்துப் பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அந்த பெண்ணுக்கு அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் தேவராஜன். அப்போது, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டுமென இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். இதற்கு அவர் சம்மதிக்கவில்லை. தொடர்ந்து அவர் தொல்லை கொடுத்து வந்ததால், செல்போனில் கண்காணிப்பாளர் பேசியதை ரெக்கார்டு செய்து வைத்துள்ளார் அந்த பெண்.

இதையடுத்து, அந்த ஆதாரத்துடன் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கண்காணிப்பாளர் தேவராஜனிடம் விசாரணை நடத்தினர். பின்னர், பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டதால், அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Read More : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..!! திமுகவுடன் நேரடியாக களம் காணும் நாம் தமிழர்..!! வெற்றி வாய்ப்பு அதிகமாம்..!!

Tags :
Advertisement