முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உயிரோடு இருக்கும்போது சோறு தராத கடவுள்..!! செத்த பிறகு சொர்க்கம் தரும் என்பதை எப்படி நம்ப முடியும்..? அமித்ஷாவை வெளுத்து வாங்கிய சீமான்..!!

Seeman has raised the question, 'How can we believe that a God who doesn't give us rice while we are alive will give us heaven after we die?'
04:53 PM Dec 18, 2024 IST | Chella
Advertisement

அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், உயிரோடு இருக்கும்போது சோறு தராத கடவுள், செத்த பிறகு சொர்க்கம் தரும் என்பதை எப்படி நம்ப முடியும்..? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ‘அம்பேத்கர், அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ‘பேஷன்’ ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்தால் சொர்க்கத்திலாவது இடம் கிடைக்கும்”
என்கிறார் மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள்.

உயிரோடு இருக்கும்போது சோறு தராத கடவுள், செத்த பிறகு சொர்க்கம் தரும் என்பதை எப்படி நம்ப முடியும்? சொர்க்கம் இருக்கிறதா? இல்லையா? என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் பெயரைச் சொன்னால் வாழும் பூமியையே சொர்க்கமாக மாற்ற முடியும். அதற்காக வாழ்ந்து வழிகாட்டிய பெருந்தகை அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.

“அழகும், நிறைவும் கொண்ட வாழ்க்கையை சொர்க்கத்தில் அல்லாது நாம் வாழ்கிற பூமியில் படைக்கப் பாடுபடுகிறேன்” என்றார் பொதுவுடமைத் தத்துவத்தின் பிதாமகன் எங்கள் தாத்தா ஜீவானந்தம். அப்படியொரு சொர்க்கத்தில் எப்படியெல்லாம் வாழலாம் என்று சொல்லி வைத்தார்களோ, அப்படியெல்லாம் இப்போது வாழுகின்ற பூமியிலேயே தன் மக்களை வாழ வைக்க அரும்பாடாற்றியவர் அண்ணல் அம்பேத்கர்.

“எப்போதும் கடவுள் பெயரை உச்சரித்த நீங்கள்தான் அயோத்தியில் தோற்றீர்கள். அண்ணல் அம்பேத்கர் பெயரை உச்சரித்தவர்தான் அங்கு வென்றார். இப்பொழுது சொல்லுங்கள் நாங்கள் யார் பெயரை உச்சரிக்க?” என்று பதிவிட்டுள்ளார்.

Read More : விவசாயிகளே..!! இனி உங்க அக்கவுண்ட்டுக்கு ரூ.12,000 வரப்போகுது..!! மத்திய வேளாண் அமைச்சகத்திற்கு பரிந்துரை..!!

Tags :
அமித்ஷாஅம்பேத்கர்சீமான்
Advertisement
Next Article